கிறிஸ்துவோடு அடையாளம் கண்டுக் கொள்ளபடுதல். Identified With Christ America, Indiyana, Jeffersonville, USA. 59-12-20E 1. உங்களுக்கு மிக்க நன்றி-! கர்த்தருடைய நாமத்தில் நான் திரும்பி வந்தமைக்காக நான் எவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன். துவங்குகையில் சற்று கரகரப்பாக இருக்கிறது. ஆனால், கொஞ்சம் கழித்து என்னை இரண்டாவது வேகத்துக்குள் கர்த்தர் கொண்டு போவார். ஆக நான் இந்த வாரம் அதிகமாக கூட்டங்களில் பேசினேன். அநேக கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியதாயிருந்தது. 2. பின்னர், கட்டிடத்தை விட்டு உஷ்ணத்தோடு வெளியேறுகிறேன் எனக்கு அதிக ஜலதோஷம். இல்லை, என்னுடைய ஜீவியத்தில் மேலாய் உணர்ந்ததில்லை. எனவே, அருமையான உணர்வு எனக்கு இருக்கிறது. என்னுடைய தொண்டைக்கோ அதிக வேலை கொடுக்கப்பட்டாயிற்று. அதெல்லாம் சரியாகி விடும் நீங்கள் எனக்கு செய்த எல்லாவற்றிற்காகவும், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 3. சில நிமிடங்களுக்கு முன்னர், நான் வண்டியை ஒட்டிக் கொண்டு வந்த போது பில்லியும் அவர்களில் சிலரும் வெளிப் பக்கமாக இருந்து கொண்டு, இங்கே வந்து நொடித்துப் போய் திரும்பி போக முடியாதபடி இருக்கின்ற ஒரு குடும்பத்தை கண்டுபிடிக்க முயற்சித்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இப்பவும் கட்டிடத்துக்குள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுடைய கரத்தை உயர்த்தியோ, அல்லது ஏதாவது செய்து காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதைப் பற்றி ஏதோ காரியம் எனக்கு வேண்டியதாயிருக்கிறது. 4. மிஸ்சிகன் அல்லது எங்கேயோயிருந்து வந்த அந்த குடும்பமானது ஒரு வேளை பெட்ரோல் அல்லது ஏதோ காரியத்தால் அல்லது பண பற்றாகுறையால் திரும்பி போக முடியாமல் இருக்கலாம். நீங்கள் இன்னமும் பட்டணத்தில் தான் இருக்கீறீர்கள். என்றால், கூட்டம் முடிந்த பிறகு, நீங்கள் அவர்களை கண்டால் என்னுடைய வீட்டு பக்கமாய் அவர்களை அனுப்புங்கள். புரிகின்றதா-? அதில் எனக்கு ஏதோ காரியம் வேண்டியதாய் இருக்கிறது. அதற்காக தான் நாம் இங்கே இருக்கிறோம். ஒரு உதவும் கரத்தை நீட்டும்படியாகதான். நம்மால் முடிந்ததை யாருக்கும் உதவ... 5. எனவே, இப்பொழுது கர்த்தராகிய இயேசுவானவர் தம்மை ஆசீர்வதிக்க வேண்டும் என்பதே நம்முடைய ஜெபமாய் இருக்கும். இப்பொழுது இது நமக்கு ஒரு வழக்கத்துக்கு மாறான வாரமாய் இருக்கிறது. ஏனென்றால், வழக்கத்துக்கு மாறான காரியங்கள் நமக்கு உண்டாயிருந்தது. ஆனால், பரிசுத்த ஆவியானவர் கூட்டத்தில் இந்த வாரத்தில் அவ்வளவு தடையின்றி அசைவாடுவதுப் போன்று நான் கண்டதேயில்லை. அது எனக்கு பரிபூரண அற்புதமாயிருந்தது. 6. இரவு நேரங்களில் நான் உள்ளே போகும் போது, நான் படுக்கைக்கு போவதற்கு முன்னர், சில சமயங்களில் காலை ஒரு மணி ஆகிவிடும். இயேசு கிறிஸ்து நமக்கு அவ்வளவு நல்லவராய் இருக்கிறதை குறித்து சிந்தனைகளில் நான் களிகூறுவேன். இந்த பட்டணத்திலோ, அல்லது சுற்று வட்டாரங்களிலோ தங்கியிருப்பதற்கு ஒரு வீடோ அல்லது சபையோ இல்லாத ஜனங்கள் இன்னமும் இங்கு இருப்பீர்களானால், நீங்கள் இங்கு வரும்படியாய் வரவேற்கிறோம். நீங்கள் எந்த நேரத்திலும் இங்கு வந்து இதை உங்கள் வீடாக ஆக்கிகொள்ளுங்கள். எங்களிடத்தில் அங்கத்தினர் ஆகுதல் கிடையாது. எல்லாருக்கும் ஐக்கியப்படுதல் மட்டும் தான் இருக்கிறது என்பது நினைவிருக்கட்டும். 7. போவாட் கேடில் வழக்கமாக சொல்லுவதைப் போன்று " எங்களிடத்தில் சட்டம் கிடையாது. அன்பு தான் ; கோட்பாடு கிடையாது கிறிஸ்து தான்; புத்தகம் கிடையாது. வேதம் தான். இருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் இந்த சிறிய ஜெப கூடாரத்தில் உங்களை நாங்கள் வரவேற்கிறோம். கர்த்தருக்கு சித்தமானால், எங்களால் முடிந்த சீக்கிரத்தில், ஒரு மேலான சபையை கட்டும்படியாய் போதுமான இட வசதியுடன் நாங்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கிறோம், மிகவும் பெரியதானதல்ல, ஏனென்றால் இயேசுவானவர் சீக்கீரமாய் வருகிறார் என்று நாம் விசுவாசிக்கிறோம். மிகவும் விஸ்தாரமான காரியம் எதுவும் நமக்கு வேண்டாம். நமக்கு ஏதாவது இருக்க விரும்புகிறோம். இது இடிக்கப்பட வேண்டியது. அதனுடைய நோக்கத்தை அது நிறைவேற்றியது. அதற்காக நாங்கள் மிக்க நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். 8. நான் ஒரு போதும் மறக்க மாட்டேன். இந்த பிரசங்க பீடம் இப்பொழுது நிற்கின்ற இதே இடத்தில் சுமார் இருபது, சில வருஷங்களுக்கு முன்னர் நான் ஒரு பழைய குளத்தில் முழங்கால்படியிட்டு, துடைப்ப கோரைகள் என் தலை மீது இருக்க ஜெபித்தேன். கர்த்தர் சொன்னார். உன்னுடைய சபையை இங்கு கட்டு என்று. ஒரு சிறு கூட்டமாக நாங்கள் இங்லாஸிடம் சென்று இந்த குளத்தை நாங்கள் நிரப்ப முடிந்தால் என்று 165 டாலர்களுக்கு இதை வாங்கினோம். இந்த குளத்தில் தான் நாங்கள் பனிக்கட்டி சருக்கல் விளையாடினோம். சகோ. ஜேஸ் பென்னகர் அவர்களுக்கு இது நினைவில் இருக்க வேண்டும். சகோதான், சகோதரி பென்னகர் அவர்களுக்கு இங்கே ஒரு குளம் இருந்தது தெரியும். உங்களுக்கு நினைவிருக்கிறது என நான் யூகிக்கிறேன். 9. அவர்கள் விளையாட்டு கூடுகளை இங்கே கொண்டு வந்து அவர்கள் குளத்துக்குள் விழுந்து விடாதபடி இந்த வழியாய் சுற்றிக் கொண்டு ஒட்டிப் போவார்கள். இங்கே இங்கிலென்-சுபி பள்ளியில் நான் சிறு பையனாய் இருந்தேன். இது ஒரு குளமாய் இருந்தது. இங்கே வந்து பனிகட்டி சருக்கல் செய்வோம். சின்னி முதலான விளையாட்டுகளை குளத்தின் மேல் விளையாடுவோம். சகோ. மைக் இது ஒரு குளமாய் இருந்த போது உமக்கு ஞாபகம் இருக்கிறதா . ஆம் ஐயா. பின்னால் இருக்கின்ற சகோ. ராய் உமக்கு இப்பொழுது அந்த குளம் எங்கே இருந்ததோ, நாங்கள் அதில் ஒரு பகுதியை விட்டுவிட்டோம். அது இங்கே பின்னால் இருக்கிறது. 10.பாவ மன்னிப்புகென்று நாங்கள் அங்கே தான் ஜனங்களுக்கு முழுக்கு ஞான ஸ்நானம் கொடுப்போம். உங்களுக்கே தெரியும். நீங்கள் இங்கே கேள்விகளை கொண்டு வரும் பொழுது, நீங்கள் அங்கு ஏதோ காரியத்தை சொல்ல வேண்டுமென்று விரும்புகிறீர்கள். அது ஒரு பிரச்சனையாய்ப்போம். ஏனென்றால், உங்களுக்கு ஒரு கலப்பான ஜன கூட்டமாக இது இருக்கும். ஜனங்கள் ஒரு விதமாகவோ, அல்லது வேறு விதமாகவோ போதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், உங்களால் காரியத்தை விளக்கி கூற முடிந்தால், அவர்கள் போதிக்கப்பட்டிருக்கிறதற்கு முரணாக இருந்தாலும் கூட, என்னை பொருத்த மட்டில் அவர்களுடைய ஆவியின் இனிமையானது தெய்வ பக்தியான அது திரும்பி ஒடிப்போய் விடும். தேவன்... குறிப்பிட்ட பெயரை நான் கொண்டு வர விரும்பவில்லை. ஆனால், ஒரு குறிபிட்ட வைத்தியர் பட்டணத்திலுள்ள, வெளியே இருப்பவர் அவர் உள்ளே இருக்கின்ற அறையில் என்னை சந்தித்தார். ஒரு மருத்துவ வைத்தியர் என நினைக்கிறேன். 11. ஆனால் அவர், அநேக வருடங்களாக இடைப்பட்டு கொண்டிருப்பதாக அவர் கூறினார். அதை குறித்து எழுதப்பட்ட ஒரு புஸ்தகத்தை அவர் வாசித்தாராம். நான் போதிப்பவைகளுக்கு முரணாக இருக்கின்ற புத்தகம். ஆனால், அவர் கூட்டங்களில் உட்கார்ந்திருந்து வேத வாக்கியங்கள் பொருத்தப்படுவதை கண்டது முதல் அது காரியங்களை என்றென்றைக்குமாய் தீர்த்து விட்டது என்று அவர் கூறினார். கொஞ்சம் முன்னர், நான் அந்த அறையில் பட்டணத்துக்கு வெளியே இருந்து வந்த ஜனங்களோடு வில்லினாயிலிருந்து வந்தவர்களை சந்தித்தேன். அங்கு சுமார் மூன்று அல்லது நான்கு ஊழியகாரர்கள் இருந்தனர். அவர்கள் என்னிடத்தில், சகோ. பிரன்ஹாம் எங்கள் ஜீவிய காலமெல்லாம் நாங்கள் முரணாகவே போதித்து வந்தோம். ஆனால், இப்பொழுது நாங்கள் தரிசனத்தைப்பற்றி கொண்டு சத்தியம் உண்மையாகவே என்ன என்பதை காணுகிறோம். அது என்னவாக இருக்க முடியும் என்று நாங்கள் வியந்து கொண்டு இருந்தோம். 12.வெறுமென அது என்னவாய் இருக்கிறதோ சகோதரனே, எந்த சபையோ, அல்லது எந்த ஜனத்தையோ அது தரகுறைவாக்குகிறது என்று நினையாதேயுங்கள். சபையை மேலாக தான் கொண்டு வருகிறது. புரிகிறதா-? பின்னர் நாம் ஒன்று சேர்ந்து நிற்க வேண்டும். நாம் ஒன்றாக சேர்ந்து நிற்க வேண்டும். 13. பெந்தெகொஸ்தே நாளன்று, தேவன் தம்மை தாமே பகிர்ந்த போது அக்கினி ஸ்தம்பத்தை சிறு அக்கினி குண்டங்களாக உடைத்து அதை கொண்டு போய் ஜனங்களுக்கு மேலாக தொங்க செய்தப் போது பரிசுத்த ஆவி அவர்கள் மேல் வந்தது. தேவன் நம்மிடையே அவரையே பகிர்ந்திருப்பாரானால் ஒவ்வொரு முறையும் அவர் நம்மோடு சேர்ந்துக் கொள்ளும்போது அது அதிகமான அக்கினி ஸ்தம்பத்தை எல்லா நேரத்திலும் சேர்த்துக் கொண்டு வருகிறது. ஒன்று சேர்ந்து அது எல்லா தேவனுடைய மீந்திருக்கும் மகத்தான சபையாக ஒன்றாக சேர்க்கப்பட்டு நாம் எல்லாருமாக சேர்ந்து ஆகாயத்தின் ஊடாக பயணம் செய்வது அவ்வளவு நிச்சயமான ஒரு காரியமாய் இருக்கிறது. 14. பிரிவினையை கொண்டு வரவோ, அல்லது முரணானதை சகோதரர் மத்தியில் விதைக்கவோ நான் ஒரு போதும் முயற்சித்தது இல்லை. புரிந்து கொள்ளுவதற்கு என்னால் இயன்ற அளவு தயவாகவே இருக்க பிரயாசிக்கிறேன். 15. என்னுடைய கூட்டங்களை ஒழுங்கு செய்கின்ற மற்ற மனிதர், சபைகளை புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன். பின்னர் அவர்கள் ஒருவருக்கொருவர் வித்தியாசமாய் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் என்னை நேசிக்கிறார்கள். என்னுடைய கூட்டங்களுக்கு ஒழுங்கு செய்கின்றார். நான் அவர்களுடைய ஜனங்களின் மத்தியில் வந்து நிச்சயமாக நான் ஒரு காரியத்தையும் சொல்ல மாட்டேன். ஒரு நல்ல தன்மையான மனிதன் அதை செய்யவே மாட்டேன். ஒரு கிறிஸ்தவனே அப்படியே விட்டு விடுவான். நிச்சயமாக செய்ய மாட்டான் . 16. நான் கூடார கூட்டங்கள் ஏதாவது ஒழுங்கு செய்தால், செய்ய வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால் என்றாவது ஒரு நாள் அப்படி ஆகும். எப்பொழுது, இந்த போதனைகள் எதையாவது நான் போதிப்பதற்கு முன்னர், முதலாவதாக போதகர்களோடு ஒரு காலை ஆராதனையை பல நாட்களுக்கு வைத்து, என்ன நான் போதிப்பதாய் இருக்கிறேன் என்பதை அவர்கள் அறியும் படியாய் அப்படி செய்வேன். 17. அப்பொழுது, அந்த சகோதரர்களால் அதை அறிந்து கொள்ள முடியவில்லை என்றால், எந்த சகோதரராயினும் அவனுடைய கூட்டத்தாரிடத்தில் நீங்கள் இதை கேட்பது எனக்கு விருப்பமில்லை. அவர்கள் அதை போதிக்கும் மட்டும் நாம் சற்று வெளியே இருப்போமாக என்று கூறி அவர்களுடைய கூட்டாத்தாரை கொண்டு போகும். புரிகின்றதா-? அவர்களுக்கு அந்த சிலாக்கியத்தை கொடும். 18. நாம் எப்பொழுதும் தேவனோடும், எவருடைய பிள்ளைகளோடு ஒவ்வொருவரோடும் இசையாய் இருக்கவே விரும்புகிறோம். எனவே, இப்பொழுது இன்றிரவு நான் ஒரு கேள்வியை உடையவனாய் இருக்கிறேன். கர்த்தருக்கு சித்தமானால், இதற்கு முன்பாக அந்த கேள்விக்கு நான் விடையளிக்கலாம் என்று நினைக்கிறேன். இன்னொன்று இங்கே இருக்கிறதென்று நான் என்னினேன். ஆனால், யாரோ என்னிடத்தில் கொடுத்த ஒரு சொப்பனமாய் இருக்கிறது. அதற்காக நான் ஜெபித்து, அதன் வியாக்கியானத்தை நான் கொடுக்க வேண்டுமென்று கேட்டு கொண்டனர். அநேக நேரங்களில் நாம் அதை செய்யும்படியாய் கர்த்தர் அவ்வளவு கிருபை உள்ளவராய் இருக்கிறார். 19. நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கூட்டங்களுக்கு வரவேண்டும், ஒவ்வொரு முறை எங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கும் போதும் நீங்கள் வரவேண்டும் என்ற எங்களுடைய அன்பான வரவேற்பு உங்களுக்கு இருக்கிறதென்று இந்த ஆராதனையை நாங்கள் துவங்குவதற்கு முன்னர் நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். லூயிவில்லிருந்தும் பட்டணத்திற்கு வெளியே இருந்தும், பட்டணத்திற்கு உள்ளேயிருந்தும், சுற்று வட்டாரங்களிலிருந்தும் வந்த இந்த அருமையான போதகர்கள் இருக்கிறார்கள். 20. செல்லக்ள்-பெரிலிருந்து வந்த சகோதரர், பாடகர்கள், அந்த ஸ்தீரி அவள் யாராக இருந்தாலும், அங்கே சற்று முன்பு பாடிக்கொண்டிருந்தாலே அவள், அந்த சிறிய பையன் முதலானோர் உங்கள் எல்லாருக்கும் எங்களுடைய மிகுதியான நன்றியை தெரிவிக்கிறோம். அங்கே, பின்னாலே சில சகோதரர்களோடு நான் பேசிக் கொண்டு இருந்தேன். அவர்கள் யார் என்று பார்ப்பதற்கும், அது என்னவென்று அறிவதற்கும் எனக்கு சந்தர்ப்பமே கிடைக்காமல் போயிற்று. ஆனால், நான் அதை நிச்சயமாக கேட்டேன். அது மிகவும் அழகாக இருந்தது. அந்த முயற்சியை நான் நிச்சயமாக பாராட்டுகிறேன். 21.இப்பொழுது, நேற்று இரவு நான் இதை தவற விட்டேன் . என்னுடைய மகன் இதை என்னுடைய லோப்பியில் (pocket) வைத்தான் . விலையேறப் பெற்ற யாரோ நபர் இதை எழுதியிருக்கிறார். இப்பொழுது நினைவிருக்கட்டும், வித்தியாசமாக இருக்க வேண்டுமென்பதற்கான கேள்விகள் இவை அல்ல. சில சமயங்களில் ஒரு கால் அவர்கள் எழுதின போது அவைகள் வித்தியாசமாக இருப்பது போன்று இருந்து இருக்கலாம். ஆனால், அது கண்டறிய முயசிக்கின்ற ஒரு உத்தமுமான இருதயமாய் இருக்கின்றது. புரிகின்றதா-? அந்தவிதமாக தான் நாம் அதை எப்பொழுதும் அனுகுவோம். எது சரியென்று அறிந்து கொள்ளும்படியாய் முயற்சிக்கும் ஏதோ உண்மையான உத்தமுமான நபராய் இருக்கிறது. இப்பொழுது, சமீபத்தில் ஒரு ஜெப கூட்டத்திற்காக ஒரு வீட்டிற்கு போயிருந்தேன். சகோ. ஜீனியா. ஜாக்சன் (Junior Jackson) சற்று முன்பு அவர் குரலை கேட்டேன். அல்லது கேட்டதாக நினைத்தேன். அவர் அப்பொழுது என்னோடு இருந்தார். அவர் அங்கே பேசி முடித்தார். அங்கே இன்னொரு சபையிலிருந்து வந்த ஒரு போதகர் இருந்தார். நான் அந்த மேடையை அடைந்த மாத்திரத்திலேயே அவர் உயரே குதித்து வந்து பேச துவங்கினார். என்னோடு வீண் சந்தடி செய்ய விரும்பினார். அப்பொழுது அங்கே சுமார் ஐந்து போதகர்கள் இருக்க நேர்ந்தது. அவர்கள் எல்லாருமாய் அந்த நேரத்தில் அந்த மனிதனை எதிர்க்க போவதாக இருந்தனர். நான் உடனே இல்லை. அதை செய்யாதீர்கள். அவர் என்னிடம் சவால் விட்டார். எனவே, நானும் அவருமாய் அதையெல்லாம் பேசி தீர்ப்போமென்று. 22.எவர் துவங்கினார்: வேதம் எங்கே பேசுகிறதோ, அங்கே நாங்கள் பேசுகிறோம். எங்கே அமையதியாய் இருக்கிறதோ. அங்கே அமைதியாய் இருக்கிறோம். இப்படி முதலானவைகளை பேசினார். அவர்கள் விலகி போய் விட்டார்கள். ஒரு சில நொடிகளில் அவன் தவறாய் மேல் காட்டினவற்றையும், தவறாய் ஒரு ஒரு சில வேத வார்த்தைகளையும் நான் குறித்து கொண்டிருந்தேன் பரிசுத்த ஆவியை பன்னிரெண்டு பேர்களுக்கு மேலாய் யாரும் பெறவில்லை. அவர்கள் அப்போஸ்தலர்களே. தெய்வீக சுகமளித்தல் அந்த பன்னிரெண்டு பேர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இப்படியாய் பலவற்றை கூறினார். எனவே, நீங்கள் பாருங்கள். அவன் இலக்கை லட்சக்கான மைல்களில் தவறிப் போனான். எனவே, அவன் பேசி அரை மணி நேரத்திற்கு பின்னர் நான் அவனை கேட்டேன். அவன் அதற்கு நீ ஒரு பிசாசு என்றான். ஆக பின்னர், அவன் பேசி முடித்த பின்னர் நான் சொன்னேன். முதல் காரியமாக நான் சொல்ல விரும்புவது சகோதரனே, அதற்காக நான் உன்னை மன்னிக்கிறேன். ஏனென்றால், நீ அந்த அர்த்தத்தோடு கூறவில்லை நீர் அதை செய்யவில்லையென்று நான் அறிவேன். ஏனென்றால், நீர் ஒரு போதகனாய் இருக்கீறீர், நானும் ஒரு போதகனாய் இருக்கிறேன். நாம் சகோதர்களாய் இருக்க வேண்டுமென்று நான் சொன்னேன். பார்த்தீர்களா-? 23. பின்னர் நான் வேத வார்த்தைகளை நாம் ஒருவரையொருவர் தவறாக புரிந்து கொள்பது வித்தியாசமான காரியம் என்றேன் ஆக, அதன் பின்னர் நாங்கள் வேத வார்த்தைகளை எடுக்க தொடங்கினோம். ஒரு நிமிஷத்தில், அவன் அவ்வளவாய் இழக்கப்பட்டு, அவனால் எங்கு நிற்பது, என்ன செய்வதென்பறே அவனுக்கு தெரியவில்லை. பின்னர், அவன் அவ்வளவாய் சிக்கி கொண்டு என்ன செய்வதென்று அறியாதவனானன் . அவன் அன்றிரவு, கூட்டத்தை விட்டு வெளியேறி நடந்தப்போது, அவன், சகோ. பிரன்ஹாம் நான் ஒரு காரியத்தை கூறுகிறேன். நீர் கிறிஸ்துவின் ஆவி உடையாராய் இருக்கீறீர் என்றான் . புரிகின்றதா-? ஒரு சில நிமிடங்களுக்கு முன்னர், அவன் ஒரு பிசாசு என்று கூறினான், இப்பொழுது கிறிஸ்துவின் ஆவி என்கிறானே என்று நினைத்தேன். 24. அதெல்லாம், நீங்கள் காரியத்தை அனுகுகின்ற விதத்தை பொறுத்தாய் இருக்கிற அவ்வளவு தான். வீண் சந்தடி செய்வது கிறிஸ்து அல்ல. இப்பொழுது, அந்த மனிதன் அவன் அதை செய்த காரணத்தினால் பயங்கரமான காரியங்கள் அவனுக்கு சம்பவித்தது. ஏறக்குறைய, அவனுடைய சிந்தையையே அவன் இழந்து போனான். ஏதோ ஒரு மனநிலை நிலையத்திலிருந்தோ அல்லது எங்கேயோ இருந்து ஜன்னல் வழியாக குதித்து தன்னை கொல்லும்படியாய் ஆனான். 25. இப்பொழுது அவன் என்னுடைய நண்பர்கள் சிலரிடத்திற்கு வருகிறான். அவன் ஒவ்வொடு நாளும் பரிசுத்த ஆவியை நாடிக்கொண்டிருக்கிறான். என்னுடைய வீட்டிற்கு வந்து பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள நான் அவன் மேல் கரங்களை வைக்க வேண்டுமாம். ஒரு மகத்தான ஸ்தாபன சபையின் போதகர். புரிகின்றதா-? எனவே, உத்தம இருதயத்தோடு எப்படி பதிலளிக்க வேண்டுமென்று நாம் அறிந்துள்ளபடியால் நாம் கேள்விகளுக்கு பதில் அளிப்போம். 26. இப்பொழுது நான் கேள்வியை வாசிக்கிறேன். நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சகோ. பிரன்ஹாம் அப்போஸ்தலர். 2:6-ல் ஜனக் கூட்டம் ஒன்று சேர்ந்து வருகிறதற்கு முன்னர், ஏன் இந்த ஜனங்கள் அப்போஸ்தலர் - 2:4- ல் அந்நிய பாஷைகளில பேசினார்கள் என்பதை தயவு கூர்ந்து விளக்கிக்கூறும். அது தான் முதலாவது கேள்வி. ஆம், அதே நபராய் இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் ஆம், அதே நபர் தான். நல்லது, இப்பொழுது நீங்கள் கவனித்து பார்ப்பீர்களானால், சகோதரனே, சகோதரியே இதை எழுதினது யாராக இருந்தாலும் சரி, அவர்கள், மாடியிலிருந்து இறங்கி தரைக்கு வருகிறதைக் குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படவேயில்லை. குழுவிருந்தவர்கள் மேல் அறையில் இல்லை. ஆனால் அவர்கள் கீழே இறங்கி ஜனத்திரள் கூடிவந்திருந்த வெளிப்பிரகாரங்களுக்கு வந்தார்கள். அங்கே தான் அவர்கள் பாஷையில் பேசுகிறதை கேட்டார்கள் புரிகிறதா-? 27. பார்த்தீர்களா-? சரி அவர்கள் அங்கே பேசினார்கள் தான் என்று கூறலாம். அது ஒரு விவாதமோ அல்லது வீண் சந்தடியோ அவர்கள் அங்கே கீழே இறங்கி வரும் மட்டாக பேசவில்லை ஏனென்றால், அந்த சத்தம் உண்டான போது என்றுள்ளது. என்று கூற உங்களுக்கும் அவ்வளவு உரிமையிருக்கின்றது, புரிகின்றதா-? இப்பொழுது, இன்னொரு காரியம் இங்கே அதேனோடு இசைந்திருக்கிறது. அப்போஸ்தலர் 8: 18,ல் பரிசுத்த ஆவி கொடுக்கப்பட்டது என்று எப்படி சீமோன் அறிந்து கொண்டான் என்பதை நீர் விளக்கி கூறும். அது . சமாரியாவே. 28. அங்கே ஒரு காரியம் இருக்கின்றது. அந்நிய பாஷைகளில் பேசின காரணத்தால் அவர்கள் பரிசுத்த ஆவியை உடையவர்களாய் இருந்தார்கள் என்று அவன் அறிந்து கொள்ளவில்லை. அல்லது அவர்கள் உடையார்களாய் இருந்தார்கள் என்று வேதம் கூறவில்லை. அவர்கள் விளைவுகளை கண்டார்கள். ஏதோ காரியம் சம்பவியாமல் ஒருவராலும் பரிசுத்த ஆவியை பெற்றுக் கொள்ள முடியாது. அது உண்மை . 29. ஆனால், அவர்கள் அந்நிய பாஷையில் பேசினார்கள் என்று அது கூறவில்லை. எனவே, அந்நிய பாஷையாய் அல்லாமல் அவர்கள் அங்கே, வேறு எதையோ அவர்கள் கண்டிருக்க குறிப்பிடபடவேயில்லை. பெந்தெகோஸ்தே நாளன்று, சில ஜனங்கள் கலிலேயா பாஷையில் பேசினார்கள் நாம் எப்படி அறிந்து கொள்ளலாம் என்று விளக்கி கூறவும். அங்கேயிருந்தவர்களில் பெரும்பாலோர். கலிலேயர்களாய் இருந்தனர். அவர்கள் எல்லாரும். 30. நான் இன்று காலையில் கூறினது போன்று, அங்கே இரண்டு காரியங்கள் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. இப்பொழுது ஜனங்கள் பாஷைகளில் பேசிக் கொண்டு இருந்தார்கள் என்பதான கருத்தின் சார்ப்பை நான் எடுத்துக் கொள்ளப் போகிறேன். அவர்கள் மேலறையை விட்டு கீழே இறங்கி வந்து, ஜனங்களை சந்திக்க துவங்கிய போது, ஜனங்கள் அந்நிய பாஷைகளில் பேசவில்லை . ஆனால், பல பாஷைகளில் பேசினார்கள் என்பதே. 31.ஆனால், நீங்கள் வேத வார்த்தைகளை வாசிப்பீர்களானால், இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயர்கள் அல்லவா-? அப்படியிருக்க, நம்மில் அவரவருடைய ஜென்ம பாஷைகளிலே . இவர்கள் பேச கேட்கிறோமே. இதெப்படி, பேசுகிற இவர் எல்லாரும் கலிலேயர் அல்லவா-? ஒருக்கால் அவர்கள் கலிலேயாவில் பேசிக் கொண்டிருந்திக்கலாம். ஆனால், அவர்கள் இன்னொரு பாஷையில் பேசுகிறதை அவர்கள் கேட்டு கொண்டிருந்தன. அவர்கள் இன்னொரு பாஷையில் அவர்களுடைய சொந்த பாஷையில் அவர்கள் பேசிக் கொண்டு இருந்திருக்கலாம். எந்த விதத்திலும் இருக்கலாம். அதொன்றும் காரியமில்லை. பெந்தெகோஸ்தின் கருத்தை அது இன்னமும் சரியானதாக ஆக்கவில்லை. ஏனென்றால், கவனியுங்கள்.. இது தான் காரணம். ஏதோ வித்தியாசமாக சொல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. காரியத்தை சரிபடுத்த வேண்டுமென்பதற்காக கூறுவேன். 32. நீங்கள் கவனிப்பீர்களேயானால்; பேதுரு ஏன் எழும்பி நின்று வந்திருந்த ஜனக் கூட்டாதாரிடமும் பேசினான். அவர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பேசும் பாஷைகளில் அவன் பேசுகிறதை கேட்டனர். ஏனென்றால், வைராக்கியமான மூவாரயிரம் யூதர்கள் மனம் மாறினார்கள். அவர்களுடைய மதத்தில் இருந்ததுப் போன்று அவ்வளவு வைராக்கியமாயிருந்தன. ஆனால், அவர்கள் உறுதியாய் நின்றிருக்க வேண்டும். தீர்க்கதரிசிகளின் பேரில் பேதுரு பேசிக்கொண்டு வார்த்தை முதலானவற்றை அதை பெந்தெகோஸ்தே மட்டுமாய் கொண்டு வந்த ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் புரிந்து கொண்டார்கள். 33.ஏனென்றால், அவர்கள் உரத்த சத்தமாய் மனிதர்களே, சகோதரர்களே நாங்கள் இரட்சிக்கபடும்படிக்கு என்ன செய்ய வேண்டும் என்றார்கள். பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் உங்களுடைய பாவமன்னிப்புகென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்றான். இப்பொழுது, நான் இதை என் முழு இருதுயத்தோடும் கூறட்டும். அதன் மூலமாக நான் உங்களுக்கு என்ன சொல்ல முயற்சிக்கின்றேன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள கூடும். 34.பாஷைகளில் பேசுகிறதை நான் நிச்சயமாக விசுவாசிக்கிறேன். அது சபைக்கு கொடுக்கப்பட்டதான ஓரு வரமென்று விசுவாசிக்கிறேன். பாஷை என்று ஒன்று உண்டு என்று நான் விசுவாசிக்கிறேன். அநேக முறைகள் நானே பாஷைகளில் பேசி இருக்கிறேன். பெந்தெகோஸ்தே... என்ன என்று, நான் நினைக்கிறேன் என்பதற்கு உங்களுக்கு நான் ஒரு உதாரணத்தை காட்டுகிறேன். அதைப் போன்று ஏதோ , இந்த ஒழுங்கின்படியாய் கூறுகிறேன். 35. இந்த படம் எடுப்பதற்கு முன்னதாக, நான், டெக்ஸஸ், டுஸ்டன், டல்லாக்கில் இருந்தேன். நாங்கள் அந்த இன்னிசை கூடத்தை எடுத்திருக்கலாம். எங்களிடத்தில் எட்டாயிரம் பேர்கள் இருந்தனர். ஜனங்களால் உள்ளே நுழைய முடியவில்லை. எனவே, நாங்கள் ரேமான் ரிச்சி அவர்களுடைய ஜெப கூடாரத்திற்கு சென்றோம். அது ஒரு பிரமாண்டமான பெரிய ஜெப கூடாரம். நாங்கள் அதை நிரப்பினோம். இங்கே, நான் பிரசங்கத்தில் வியாதியஸ்தருக்காக ஜெபிப்பேன். பின்னர் அவர்கள் அவர்களை வைத்த போது நான் அங்கே போய் பிரசங்கித்து அவர்களுக்காக அங்கே ஆர்ட்ரிட்சி அக்கறையிலுள்ள ரேமான் ரிச்சி ஜெப கூடாரத்தில் ஜெபிப்பேன். 36.பின்னர் நாங்கள் அங்கே இருந்தப் போது திருப்பி இன்னிசை கூடத்திற்கு வருவதற்கு ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தோம். நான் போக கூடிய அளவிற்கு போகும்படியாய் போவாட் என்னை அனுமதித்தார். என்னுடைய தோளை தொட்டு அவர் பக்கவாட்டில் என்னை தட்டிக் கொடுத்தார் நீங்கள் கவனித்தீர்ப்பீர்களானால், அறைக்குள்ளாக அபிஷேகமானது மேலிருக்கும் பொழுது இந்த விதமாக என்னை தட்டிக்கொடுப்பார்கள். அதன் அர்த்தம் என்னவென்றால், இது முடிக்க வேண்டிய நேரம், இதற்கு மேல் பேசாதே-! வா-! என்பதாகும் 37. போவாட், வழக்கமாக இங்கேயிருப்பார். நான் இங்கே நிற்பேன். அவர் என் கரத்தைப் பற்றி அவருடைய தோளின் மேல் போட்டுக் கொண்டு நடந்து வெளியே செல்வார். புரிகின்றதா-? நான் போதுமானதை பேசி விட்டேன் என்று அவர் அறிவார். அப்படியாய், அவர் என்னை தட்டி கொடுத்தப் போது, நான் மேடையை விட்டு செல்ல துவங்கினேன் . சரி, சகோதரனே என்றேன். மேடையை விட்டு செல்ல துவங்கினேன். ஒரு சிறு பெண் உட்கார்ந்து கொண்டிருந்தாள். இங்கே நின்று கொண்டு அழுதுக் கொண்டிருந்தாள். ஒரு சிறு மெக்ஸிகன் பெண். பார்ப்பதற்கு பன்னிரெண்டு, பதினான்கு வயதுள்ளவள் போல் இருந்தது. இருபது வயதுகுள்ளிருந்தாள். 38.நான் அவனை நோக்கி பார்த்து என்ன சமச்சாரம் தேனே-! என்றேன். போவோட், அவள் அழுது கொண்டிருக்கிறாள். ஏனென்றால் என்றேன். அவர் அதற்கு உனக்கு போதுமான அளவு ஆயிற்று. அங்கே இன்னொரு கூட்டம் அங்கே காத்து கொண்டிருக்கிறது என்றார். நான் அவளை மேலே கொண்டு வாருங்கள் என்றேன். நான் அப்படி சொல்லிக் கொண்டே மேடையின் முனைக்கு வந்து விட்டேன். அவளோ மேடையின் மேல் வந்து விட்டாள். 39.நான் நினைக்கிறேன் சகோ. புட்ஸ் மற்றவர்களும் அங்கே இருந்தார்கள் என்று, அவர்கள் கூட்டத்தில் இருந்தார்கள், அந்த நேரத்தில் இருந்தார்களா அல்லது இல்லையா என்று எனக்கு தெரியவில்லை. சகோ. புட்ஸ் இன்று நீர் இருக்கீறீரா-? அதற்கு அவர் இருந்தேன் என்றார். ஆம் நீர் அங்கேயிருந்தீர். அவளை மேடையின் மேல் கொண்டு வாருங்கள் என்று நான் சொன்னேன். நான் அவரிடத்தில், இங்கே பார் தேனே : உனக்குள்ள தொல்லை என்ன என்று கர்த்தரால் என்னிடத்தில் சொல்ல முடியும் என்று நீ விசுவாசிக்கிறாயா-? என்றேன். அவள் அப்படியே அவளுடைய சிறிய தலையை மடங்கினவாறு வைத்திருர்தார். சரி, அவள் செவிடும், ஊமையும் போல் இருக்கிறதென்று நான் நினைத்தேன். எனவே, அவளை மீண்டும் நோக்கிப் பார்த்தேன் அது பேச்சு என்றறிற்தேன். ஒ-! அவளால் ஆங்கிலம் பேச முடியாது என்று கூறினேன். அவளால் ஒரு ஆங்கில வார்த்தை கூட பேச முடியாது. எனவே அவள் மெக்ஸிகோவிலிருந்து வந்திருக்க வேண்டும். 40.எனவே, நான் ஒரு மொழிப் பெயர்ப்பாளரை வரும்படி அழைத்தேன். நான் சொன்னேன். உன்னுடைய கோளாறு என்ன என்பதை கர்த்தராகிய இயேசுவினால் என்னிடத்தில் சொல்ல முடியும் என்று தேனே விசுவாசிக்கிறாயா என்றேன். அவள் அப்படியே மொழிப் பெயர்ப்பாளரிடம் என்னால் விசுவாசிக்க முடியும் என்று திருப்பி பதில் அளித்தார். உன்னால் ஆங்கிலம் பேசவே தெரியாதே என்று கூறினேன். மொழிப் பெயர்ப்பாளர் அதை அவளிடம் கூறினார். அதற்கு அவள் இல்லை என்றாள் ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை கூட அவளுக்கு தெரியாது. அவள் மெக்ஸிகோவிலிருந்து (mexico) வந்தவள். 41. அதற்கு பின்னர் தரிசனம் துவங்கினது. அவர்கள் தரிசனத்தை மொழிப்பெயர்த்தது இல்லை. ஏனென்றால், நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறீர்கள். ஒரு தரிசனத்தை ஒரு போதும். மொழிப் பெயர்க்காதீர்கள். எனவே, எல்லாம் முடியும் வரை காத்திருந்து அதன் பின்னர், என்ன சம்பவித்தது என்பதை அவர் கூறுவார். 42. எனவே, பின்னர் நான் அதைப் பேச துவங்கின் போது, நான் ஒரு தரிசனம் கண்டேன். நான் சொன்னேன் . சுமார் ஆறு வயதுள்ள ஒரு சிறுப் பெண்ணை நான் காணுகிறேன். அவள் ஸ்காஸ்பிலே உடையை அணிந்திருக்கிறாள். அவளுடைய முதுகில் கறுத்த தலை மயிர் நீளமாய் தொங்கி கொண்டிருக்கிறது. அதில் ரிப்பன் கட்டியிருக்கிறது. அவள் ஒரு பழைய மாதிரியான குளிர்காயும் அடுப்பிணன்டை உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அங்கே ஒரு பெரிய கெட்டில் (kettle) இருக்கிறது. அதிலிருந்து அவள் மஞ்சள் சோளத்தை சாப்பிட்டு கொண்டிருக்கிறாள். அவள் பயங்கரமாய் சுகவீனம் ஆகும் அளவிற்கு அவ்வளவு அதிகமாய் அதை சாப்பிட்டாள். அவள் அப்படியே விழுகிறாள். அளுடைய தாயார் அவளை படுக்கையின் மேல் கிடத்தியிருக்கிறாள். அவளுக்கு காகாய்-வலி வியாதி இருக்கிறது. அது தான் அவளுக்கு நேர்ந்தது என்று கூறினேன். புரிகின்றதா-? அது முதற் கொண்டு உனக்கு காக்காய் வலி இருக்கிறது என்றேன். மற்ற யாரும், ஏதும் சொல்லுவதக்கு முன்னால், துரிதமாக மொழிப் பெயர்பர்பாளரை நோக்கிப் பார்த்து, அவளுடைய சொந்த பாஷையில், அவரால் ஸ்பானிய பாஷை பேச முடியாது என்று நினைத்தேன் என்று கூறினாள். அந்த மொழிப் பெயர்பாளர் என்னிடம், நீர் ஸ்பானிய பாஷையில் பேசினீரா என்று கேட்டார் நான் இல்லை ஐயா, நான் ஆங்கிலத்தில் பேசினேன் என்றேன். ஆனால், நீர் ஸ்பானிய பாஷையில் பேசினீர் என்று அவள் கூறுகிறாளே என்றார். 43.நான் அதைப் புரிந்து கொண்டேன். நான் சொன்னேன், ஒலிப்பதிவு கருவிகளை நிறுத்துங்கள். அங்கே ஒரு பெரிய கூட்டம் ஒலிப்பதிவு கருவிகள் இருந்தன. அந்நாட்களில் ஒருக்கால் முப்பது இருந்திருக்கலாம். சகோ. ராய் ராபர்ட்ஸ் நீர் அங்கே இருந்தீரா-? ஆம். சகோ. ராய் ராபர்ட்சும், சகோதரி. ராபர்ட்ஸ்னும், மற்றவர்களும் அங்கே இருந்தனர். எனவே, நான் பதிவு செய்தவை நிறுத்துங்கள் என்று நிறுத்தி அதை அப்படியே திருப்பிப் போட்டு கேளுங்கள் என்றேன். அது உண்மையாகவே ஆங்கிலமாக இருந்தது. ஆனால், நீங்கள் பாருங்கள், பின்னர் நான் துவங்கின போது, தரிசனமானது தொடர்ந்து போய் கொண்டிருந்த வரைக்குமாய் நான் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால், அவளோ ஸ்பானிய பாஷையில் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் அதை செய்தேன் என்று வெறுமன கூறுவதற்காக பரிசுத்த ஆவியானவர் அப்படி ஏதாவது காரியத்தை பரிசுத்த ஆவியானவர் செய்ய மாட்டார். அதற்கு ஒரு அவசியமும் காரணமும் இருந்தாக வேண்டும் புரிகின்றதா-? 44. அப்படியிருக்க நம்மில், அவரவருடைய ஜென்ம பாஷையில் இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி-? ஆனால், நானாகவே பேச துவங்கினவுடன், அப்பொழுது, அவளால் நான் கூறின ஒன்ரையும் கேட்க முடியவில்லை. ஆனால், ஆவியின் ஏவுதல் இருக்கும் பொழுது அவளுக்கு கேட்டது. அதை அப்படியே பெந்தெகோஸ்துக்கு பொருத்திப் பாருங்கள். பார்த்தீர்களா-? நண்பர்களே-! தேவனே என்னுடைய நியாயாதிபதி. பரிசுத்த ஆவியானவர் அதை செய்தார். நம்முடைய புரிந்து கொள்ளுதலுக்காக நாம் அதை அப்படியே பெந்தெகோஸ்துக்கு பொருத்திப் பார்போம். இப்பொழுது அந்த நாளன்று, நாம்மில் அவரவருடைய ஜென்ம பாஷைகளிலே இவர்கள் பேச கேட்கிறோமே. இதெப்படி-? பேசுகிற இவரெல்லாரும் கலிலேயர் அல்லவா-? அவர்கள் கலிலேயாவில் பேசவில்லையென்றால், அவர்கள். கலிலேயர்கள் தான் என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டனர். அவர்களெல்லாம் ஒன்றுப்போல் ஆடை அணிந்து இருந்தார்கள். அவர்கள் கலிலேயர்கள் தான் என்று அவர்கள் எப்படி அறிந்து கொண்டார்கள். 45. பேசுகிற இவகளெல்லாரும் கலிலேயர் அல்லவா-? நம்மில் அவனவனுடைய ஜென்ம பாஷையிலே பேச கேட்கிறோமே. இதெப்படி-? அப்பொழுது, இன்னொரு மனிதன் எழும்பி நின்றான், ஒரு கலிலேயன். பேதுரு, எழும்பி அவர்களுக்கு பிரசங்கிக்க தொடங்கினான். எந்த விதமாகவோ, அந்த மகா திரளான கூட்டத்திலே மூவாயிரம் ஆத்துமாக்கள் அவனை புரிந்து கொண்டன. வந்து, மனமாறி அவருடைய ஜீவியத்தை கிறிஸ்துவுக்கு கொடுத்தார். இப்பொழுது கவனியுங்கள். நான் தயை கூர்ந்து இன்னும் ஒரு வேத வார்த்தையை எடுத்துக் கொள்ளுகிறேன். நாம் அந்த மகத்தான பரிசுத்த பவுலைப் பார்போம். அதன் பின்னர், நாம் 1-கொரி 12 ஆதிகாரத்தை வாசிப்போம். பின்னர் 1 கொரி - 13. வந்து, அங்கே பவுல் காதானது - மூக்கினிடத்தில் நீ எனக்கு வேண்டுவதில்லை. முதலான சரீரத்தின் அவயவங்களைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் 13 - அதிகாரத்தில் அவர் என்ன கூறுகிறார் என்பதை கவனியுங்கள். 46. இப்பொழுது இரண்டு விதமான பாஷைகள் அங்கே வேதத்தில் சொல்லப் பட்டுருப்பதை நாம் அறிவோம். அவைகளில் ஒன்று இந்த பூமியின் மேல் பேசப் படுகின்ற பாஷையாயிருக்கிறது. இன்னொன்று அறியாத ஒரு பாஷையாய் இருக்கிறது. என்னுடைய விளையேறப் பெற்ற ஜனங்களில் அநேகர் நான் ஒரு பெந்தேகொஸ்தே என்று உங்களிடம் கூறியிருக்கிறேன். என்னுடைய ஜனங்களில் அதிகப்படியானவர்கள் அதை விசுவாசிக்கிறார்கள் அதாவாது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளூம் போது. அவர்கள் எழும்பி நின்று அறியாத அன்னிய பாஷைகளில் பேசுகிறார்கள் அது வேத வார்த்தைகளுக்கு முற்றிலும் தவறாக இருக்கிறது 47.அப்பொழுது அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று ஜனங்களுக்கு தெரியாது. ஆனால் பெந்தேகோஸ்தே நாளன்று எவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று ஒவ்வொருவறும் அறிந்திருந்தனர். அது தான் ஒவ்வொரு தேசத்திற்கும் புறப்பட்டுப் போகிறதாய் இருக்கின்றது புரிகின்றதா-! சுவிசேஷமானது எருசலேம் துவங்கி உலகமெங்கிலும் பிரசங்கிக்கப்படவேண்டும் என்று இயேசு கூறினார். அந்த இடத்தில் அது அந்த விதமாகவே இருக்க வேண்டியதாயிருந்தது. இப்பொழுது கவனியுங்கள் பவுல் இந்தவிதமாக கூறுகிறார் ஒரு பாஷை அதை நாம் பேசுகிற பாஷை. அந்நிய பாஷையானது பாஷைகளின் வரமாயிருக்கிறது. அந்நியபாஷையாக இருக்கிறது அந்த பாஷையை வியாக்கியானம் செய்தால் ஒழிய அல்லது வெளிப்படுத்தப்பட்டால் ஒழிய அது அதிக பிரயோஜனமாயிருக்காது. 48.பின்னர் நாம் 13 ஆம் அதிகாரத்தில் என்ன பார்க்கிறோம் நாம் மனுஷர் பாஷைகள். நான் ஒன்றுமில்லை. எனவே நீங்கள் மனிதர்கள், தூதர்கள் இரண்டு விதமான அசலான பாஷைகளாலும் நீங்கள் பேசலாம் அப்படி இருந்தும் இன்னும் பரிசுத்த ஆவியை பெறாதவர்களாய் இருக்கலாம். 49. எபிரெயர் 6-ஆம் அதிகாரத்தில் அது நமக்கு இல்லையா... மழையானது கோதுமைகளின் மேலும், களைகளின் மேலும் பெய்கிறது. நீதியுள்ளவர்கள் மேலும், அநீதியுள்ளவர்கள் மேலும் மழை பெய்கிறதென்று இயேசுவானவர் கூறவில்லையா. பாருங்கள் கோதுமையை வளரும்படி செய்கிற அதே மழை தான், களையையும் வளர செய்கிறது. அதே மழை தான். ஆனால், அதனுடைய கனிகளால் நீங்கள் அதை அறிவீகள். ஆவியின் முதல் கனியோ அன்பாக இருக்கிறது. பவுல் என்ன கூறுகிறார். எனக்கு எல்லாம் இருக்கிறதும், எல்லா விதமான பாஷைகளிலும் பேசுவும்... ஆனால், அன்பு, நிடியபொறுமையும், தயவும், விசுவாசமும், இச்சையடக்கமும் முதலானயவைகள் எனக்கு இல்லையென்றால் எனக்கு பிரயோஜனம் ஒன்றுமில்லை என்று கூறுகிறார். 50.பின்னர், வரங்களைக் குறித்து கவனியுங்கள். நீங்கள் கூறலாம் அங்கே ஓர் மகத்தான தேவனுடைய மனிதன் இருக்கிறார். ஒ அவர் அற்புதங்களை செய்கிறார் என்று .... அது அவனை இன்னமும் சரியாகுகிறதில்லை . அற்புதம் நடப்பிக்கும் வரங்கள் எனக்கு இருந்துலும் 1 கொரி 13-ல் பவுல் அந்த விதமாக கூறுகிறார். மலைகளை பெயர்க்கதக்க விசுவாசம் எனக்கிருந்தும் ஆவியின் கனியாகிய அன்பு எனக்கு இல்லையென்றால், நான் ஒன்றுமில்லை. என்கிறார். ஏனென்றால், விசுவாசமானது எந்த காரியத்தையும் செய்யும். அதன் நிமித்தமாகவே நான் உங்களுடைய விசுவாசத்தின் தகுதியினால் நீங்கள் சுகமானீர்கள். உங்களால் விசுவாசிக்க கூடுமானால் என்று எப்பொழுதும் கூறுவோம். 51.நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. அவனால் அதை செய்ய முடிந்தாலும் நான் ஒன்றுமில்லை. எனவே, நீங்கள் பாருங்கள். உங்களால் ஒன்றையும் கூற முடியாது. இப்பொழுது என்னுடைய விலையேறப் பெற்ற மெத்தோடிஸ்ட் நண்பருக்கு, இங்கேயும் எல்லா விதத்திலும், என்னிடத்தில் இரண்டு சாரார்கள் இருக்கிறார்கள். அவர்களை இங்கு நான் உடையவனாய் இருக்கிறேன். அவர்களில் அநேகர். மேத்தோடிஸ்ட் சபை அதின் துவக்க நாட்களிலே, அதன் பூர்வ நாட்களிலே, ஓரு மனிதனுக்கு போதுமான அளவு மார்க்கம் இருந்து சத்தமிடுவதற்கு பரிசுத்தமாக்கப்பட்டிருந்தால் அவன் அதை உடையவனாய் இருக்கிறான் என்று உரக்கமாய் விசுவாசிப்பார்கள்.. பெந்தெகோஸ்துக்கள் அவன் அன்னிய பாஷைகளில் பேசின பொழுது, அவன் அதைப் பெற்று கொண்டான் என்று கூறுகிறார்கள். இந்நாட்களில் சுகம் அளிக்கும் ஊழியம் உங்களுக்கு இருந்தால், நீங்கள் அதை உடையவர்களாய் இருக்கிறீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். 52. கவனியுங்கள். நண்பர்களே-! உணர்ச்சி வசப்படுதல், இதனை தேடவும், சார்ந்திருக்கவும் முயற்சியாதேயுங்கள். உணர்ச்சிகளின் மேல் அல்லாமல் உண்மை பொருளின் மேல் சார்ந்திருங்கள். சத்தமிடுதல் அதெல்லாம் பரவாயில்லை. பாஷைகளில் பேசுதல் அதெல்லாம் பரவாயில்லை காத்தரை துதித்தல் அதெல்லாம் பரவாயில்லை. விசுவாசத்தினால் அற்புதங்கள் இருத்தல், அதெல்லாம் காரியங்களும் பரவாயில்லை. அந்த உணர்வுகள், அவர்களில் சிலர் ஒ-! பலத்த காற்று அடிப்பது போன்று அதை நான் உணர்ந்தேன் என்றும், இன்னொருவன் என்னுடைய ஆத்துமாவில் நான் அக்கினியை உணர்ந்தேன் என்றும் கூறுகிறார்கள் என்ன. எந்த விதத்திலும் அது சரியாக ஆக்குவதில்லை. அதை பெற்றுகொண்ட பின்னர் நீங்கள் எப்படி ஜீவிக்கிறீர்கள் என்பது தான் அது. புரிகின்றதா-? அது தான் இருக்க வேண்டியது. புரிகின்றதா-? எனவே, நீங்கள் எந்த குறிபிட்ட உணர்ச்சி வசப்படுதலுக்கும் இதை சுட்டி காட்ட முடியாது. 53. இப்பொழுது எனக்கு தெரிந்த உத்தமமாக, நேரானது அதுவே. நான் ஒருக்கால் தவறாய் இருக்கலாம். அப்படியாய் நான் இருந்தால் அப்பொழுது நான் வேத வார்த்தைகளை தவறாய் புரிந்து கொண்டேன் என்பதாகும். அது முரணாய் இருந்தால் நல்லது. நான் முரணான இருக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. புரிகின்றதா-! ஆனால், அது உண்மை என்னவென்று தான் விசுவாசிக்கின்ற புரிந்து கொள்ளுதலை தான் நான் உங்களுக்கு சொல்லுகிறேன். நம்முடைய வழக்கமாக ஆராதனையை நாம் துவங்குவதற்கு முன்னதாக இங்கே நாம் இதன் பெயரில் அதிகமான நேரத்தை எடுத்துக் கொண்டே சில நேரங்களில் இந்த காரியங்களை எல்லாம் நாம் அடிக்கடி இந்த ஜெப கூடாரத்தில் குறிப்பிடுவதில்லை. இது தான் முதல் தடவையாக ஒரு அதிகப்படியான நேரத்திற்கு ஒருகால் ஒன்று அல்லது இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்னர் இதை பேசினேன். பின்னர் ஒருக்கால், நம்முடைய ஜனங்களில் சிலர் வந்து சகோ. பிரன்ஹாம் எனக்கு பரியாச உதடுகள் இருந்ததே நான் இதை செய்தேனே, நான் அதை செய்தேனே என்று சிலர் கூறலாம். நான் அதற்கு, எல்லாம் சரி தான். அது மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறலாம். 54. இப்பொழுது, நீங்கள் ஒரு அன்னிய பாஷையிலே பேச விரும்பினால் உங்களை பேசும்படி தேவன் அனுமதிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். ஆனால், வேற வார்த்தைகளின்படியாய் பரிசுத்த ஆவி வரும் வரைக்குமாய் நீ ஒன்றுமில்லாதவராய் இருக்கிறாய். அப்படியானால், பரிசுத்த ஆவி வந்ததும் நீங்கள் அன்னிய பாஷை பேசலாம். நீ யாரென்று இயற்கையான சுபாவதை தேவன் எடுத்து போட்டு உனக்காக அதை துண்டித்து வெளி எடுத்து ஒரு மேலான ஊழியனாய் இருக்கும் அளவிற்கு உன்னை ஆக்குவார் ஒருக்கால் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும்படி உங்களை ஆக்கலாம். உங்களை தீர்க்கதரிசியாக ஆக்கலாம். ஒருக்கால் உங்களுக்கு தீர்க்கதரிசன ஆவியை கொடுக்கலாம். ஒருக்கால் அவர் கொடுக்கலாம். உனக்கு அவர் என்ன செய்வார் என்று கூறுவது கடினமாயிருக்கும். அல்லது அந்த காரியங்கள் எல்லாவற்றையும் அவர் உனக்கு கொடுக்கலாம். ஆனால், முதலாது காரியம் உணர்ச்சி வசப்படுவதினால் அல்ல. ஆனால் ஒரே ஆவியினால் நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ் நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். என்ற நிச்சயத்தை உடையவர்களாய் இருங்கள். 55. அப்பொழுது அந்த சரீரத்திலிருந்து வரங்கள் வரும். பாருங்கள். அன்னிய பாஷையில் பேசுதல், மற்ற காரியங்கள் வரும். அது என்னவாய் இருக்கிறது . நசரேயர்கள் என்னிடத்தில் வந்தால் சகோ. பிரன்ஹாம் அங்கே ஒரு நசரேய மெத்தோடிஸ்ட் இருக்கிறார். அவர்கள் சத்தமிட்ட போது பரிசுத்த ஆவியை பெற்றுக் கொண்டேன் என்று கூறுகிறனார்கள் என்று கூறுவார், அவர்கள் பெறவில்லையென்று நான் கூறவில்லை. ஆனால், நான் கவனிக்கின்ற ஒரு காரியம் இங்கே இருக்கிறது அவர்களுடைய கனியினால் .... 56.சத்தியமானது வெளிப்படுத்தப்பட்ட போது அவர்களில் சிலர் அது பிசாசாக இருக்கிறதென்று அதற்கு எதிராக கசப்பாக திரும்புகிறார்கள். அப்பொழுது அது எங்கிருந்து வந்தது என்று கனியானது காட்டுகிறது. புரிகின்றதா . அவர்கள் அதைப் பெறவில்லை என்பதை அது காட்டுகிறது. ஆனால், வெளிச்சத்தில் நடக்க சித்தமாயிருக்கிறவர்கள் வார்த்தையை ஏற்றுக் கொள்ளுகிறார்கள், இங்கே சிறிது காலத்துக்கு முன்னர் நான் கென்டகியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அந்த கூட்டத்தில் அற்புதங்களின் நாட்கள் கடந்து போய்விட்டன என்று விசுவாசிக்கின்ற சபையை சேர்ந்து ஒருவர் வெளியே இருந்தார். அவர் ஒரு லாந்தர் விளக்கை (Betarmax light) கையில் பிடித்து கொண்டிருந்தார் அவர் பிரசங்கியாராகிய உமக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன் என்றார். நானும், ஒரு வயதான மாமாவும் (Uncle) இருந்தோம். அவர் கடந்து போய்விட்டர். நான் : ஆம் ஐயா என்றேன். அவர் நான் இன்னார் இன்னாரென்றார். நான் அவருடைய கரத்தை குலுக்கினேன். சகோதரனே, உம்மை சந்தித்ததில் நிச்சயமாகவே சந்தோஷப்படுகிறேன் என்றேன். 57. அவர் என்னிடத்தில் நீர் முற்றிலுமாக தவறாக இருக்கீறீர் என்று நான் விசுவாசிக்கிறேன் என்பதை உம்மிடத்தில் கூற விரும்புகிறேன் என்று கூறினான். நான் அதற்கு, நல்லது. அதை கூறுவதற்கு உமக்கு உரிமை இருக்கிறது. ஏனென்றால், நீர் ஒரு அமெரிக்கனாய் இருக்கிறீர் என்றேன். அவன் அதற்கு " நல்லது. நீங்கள் பாருங்கள் எங்களிடத்தில். அப்படி என்றார். நான் எதில் தவறு. சுகமளிப்பதை குறித்து கூறுகீறீரா என்றேன். நேற்று அங்கே வெறும் கால்களில் ஒரு சிறு குழந்தையுடன் நடந்து சென்றானே அவனை குறித்து என்ன-? அவளுக்கு வயது பதினான்கு கூட இல்லை. வெறும் கால்களில் இருந்தாலே. நீங்கள் அதை குறித்து என்னவென்று அழைப்பீர்கள். கிங்யாங்ட்டலிபோ அல்லது ஏதோ விதமான ஆடை, அந்த காரியங்களை குறித்து எனக்கு தெரியாது. அவள் ஒரு சிறு குழந்தையை கரத்தில் வைத்து என்னிடமட்டுமாய் வந்தாள். ஜனங்களோ அதிர்ச்சியாய் இருந்தார்கள். இது ஒயிட்ஹால் (White Hall) மெத்தோடிஸ்ட் சபையில் நடந்தது. கென்டகியிலுள்ள வெர்க்கல்-வில்லிக்கு வெளியே இருக்கிறது. நான் அங்கே தான் பிறந்தேன். 58. அவள் அந்த சிறிய குழந்தையை வைத்து கொண்டிருந்தாள். யாராவது வியாதியாய் இருக்கீறீர்களா என்று நான் கேட்டேன். அவள் ஊடாக நடந்து அங்கே வந்தாள். ஒரு சிறிய கூச்சம் உள்ளவள். தன்னுடைய தலையை வணங்கினவாறு ... ஆம், ஐயா என்னுடைய குழந்தை என்றாள். அந்த சிறுசு இந்த விதமாக போய்க் கொண்டிருந்து. அந்த குழந்தைக்கு என்ன சகோதிரியே என்றேன். அதற்கு அவள், இழுக்கிறது, . உதருகின்றது என்றாள். உதருகிறதா என்று கேட்டேன் . ஆம் ஐயா என்றாள், எவ்வளவு காலமாக இந்த பிள்ளைக்கு இப்படி இருக்கிறது என்றேன். அதற்கு அவள் பிறந்தது முதலாய் அதற்கு அப்படியிருக்கிறது. ஒரு வயதை நெருங்கி கொண்டிருக்கிறது என்றாள். அந்த குழந்தையை என்னுடைய கரத்தில் துக்க நீ அனுமதிப்பாயா என்றேன் . உயரே ----- நீங்கள் ஒரு விதமாய் அதை கவனிக்கவேண்டும். அவள் ஆம் ஐயா என்றாள். அந்த சிறு பையனை என்னுடைய கரத்தில் கொடுத்தாள். நான் ஒரு நிமிடம் அப்படியே நின்றேன். என்னுடைய இருதயத்தில் நான், தேவனே இந்த ஜனங்களை நான் ஜெயிக்கும்படியாய் நீர் செய்யப்போகீறீர். அப்படியானால், எனக்கு இப்பொழுதே ஏதாவது காரியத்தை செய்யும் என்று கூறினேன். நான் அந்த குழந்தையை என் கரத்தில் வைத்து கொண்டிருக்கும் போதே, அந்த இழுப்பு நின்றுப் போயிற்று நான் அதை நோக்கிப் பார்த்தேன். உயரமாக துாக்கி கரங்களில் அதனோடு விளையாடினேன். அது சிரித்து உற்று என்னை பார்த்தது அவனை கீழாக நோக்கி பார்த்தேன். அவளுடைய தலையை தொங்க போட்டவாறு இருந்தாள். தலைமயிர் இரண்டாக வகுக்கப்பட்டு ஜடைப் போட்டு முதுகின் மேல் தொங்கி கொண்டிருந்தது. அவள் தன் தலையை துாக்கிப் பார்த்தாள். கண்ணீர் அவளுடைய சிறிய கன்னங்களில் வழிந்தோடிக் கொண்டிருந்தன. 59. முரட்டு மனிதர்கள் அவர்களுடைய முகத்தில் எவ்வளவு நீளமான கிருதா மயிருடன் நின்று கொண்டு அவர்களுடைய கன்னங்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்து சகோதரியே இதோ உன் குழந்தை இயேசு கிறிஸ்து அதை சுகமாக்கினார் என்று கூறினேன். அந்த வயதான ஸ்திரிகள் மயக்கமடைந்து. தரையிலே விழதொடங்கின. அவர்களுடைய முகத்தில் தண்ணீர் தெளித்து, அவர்களுக்கு விசிறினார்கள் ஏன்-? அதை செய்தது என்ன என்று கேட்டேன். அதற்கு அவர். சகோ. பிரன்ஹாம் நான் முற்றும் முடிய ஒன்றை கண்டால் ஒழிய நான் ஒன்றையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று கூறினார். சரி. அப்படியானால். அது நல்ல கருத்து என நினைக்கிறேன். ஆனால், நீர் எங்கே ஜீவிக்கீறீர் என்று நான் உம்மை கேட்க விரும்புகிறேன். அதற்கு அவர் அங்கே மலைக்கு பின்னாக இந்தபடியாக ஜீவிக்கிறேன். என்னோடு கூட வீட்டுக்கு வந்து இன்றிரவு என்னோடு சாப்பிட்டு வரலாமே, நான் உமக்கு சில சோள ரெட்டியும், மோரும் தருகிறேன் என்றார். நான் சொன்னேன், நான் உம்மோடு வர விரும்புகிறேன், நான் உண்மையாகவே பசியாய் இருக்கிறேன். ஆனால், என்னால் அதை செய்ய முடியாதே. என்னுடைய மாமாவுடன் நான் வீட்டிற்கு போய் ஆக வேண்டும். 60. ஐயா, நான் உம்மை கேட்க விரும்புகிறேன். நான் உம்மிடத்தில் ஒரு காரியத்தை குறித்து கேட்க விரும்புகிறேன் நீர் வீட்டிற்கு போய் சேருவீர் என்று உமக்கு எப்படி தெரியும். அவரோ, நான் அப்படியே நடந்து மலையின் மேல் கடந்து உம்மால் காண முடிகிறதா என்றேன். உம்முடைய வீட்டை நான் சொன்னேன் : அப்படியானால், அங்கே போய் நீர் சேருவீர் என்று எப்படி உனக்கு தெரியும் என்று.. அங்கே போய் சேருகின்ற ஒரு பாதை அங்கே இருக்கிறது என்று அவர் கூறினீர். நான் சொன்னேன். இன்னமும், அதை உம்மால் காண முடியவில்லை. நீர் இப்பொழுது தான் என்னிடத்தில் கூறினீர், நான் எதையும் முற்றும் முடிய காணாமல் ஒழிய அதை ஏற்று கொள்ளுவதில்லை என்று சொன்னீரே என்றேன். அவர் அதற்கு ஒ-! நான் விளக்கை எடுத்து கொண்டு, அந்த விளக்கோடு நடந்து செல்வேன் என்றார். நான் சொன்னேன். அதை தான், நானும் செய்ய வைக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருக்கிறேன். அவர் விளக்காய் இருக்கிறது போன்று, அந்த லாந்தர் விளக்கு (Betramax Light) வெளிச்சத்தை கொடுக்க, நீர் அந்த வெளிச்சத்தில் நடக்கிறீர். நாம் அங்கே சரியாய் போய் சேர்ந்து விடுவோம். நான் அந்த முடிவை தெளிவாய் காணவில்லையென்றாலும், ஆனால், அது அங்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். இப்பொழுது நாம் ஜெபம் செய்வோமாக... 61. பரலோக பிதாவே-! அன்பின் மையமாய் இருக்கின்ற இயேசு கிறிஸ்துவின், நன்மைக்காக நாங்கள் உமக்கு நன்றியுள்ளவர்களாய் இருக்கிறோம். நீர் என்னோடு கோபமாய் இருக்கீறீர் என்று நான் நினைப்பதுண்டு. ஆனால், இயேசு என்னை நேசித்தார். ஆனால், தேவனுடைய இருதயம் தான் இயேசு என்பதை நான் கண்டறிந்தேன். எனவே, நீர் என்னை நேசீத்திர் என்றும், எனக்காக நீர் பாடுபட்டீர் என்றும் நான் அறிந்திருக்கிறேன் . பிதாவாகிய தேவனே, நான் இந்த உலகத்திற்காகவும், எங்கள் தேசத்திற்காகவும் ஜெபிக்கிறேன். என்னுடைய தவறுகளுக்காகவும், நான் மேய்ப்பனாய் இருக்கும்படி, நீர் எனக்கு கொடுத்த ஜனங்களாகிய இவர்களுடைய தவறுகளுக்காகவும் நான் மன்னிப்பை கோருகிறேன் கர்த்தாவே. அவர்களையும், இந்த கூட்டத்தில் இருக்கின்ற ஒவ்வொருவரையும், கேள்விகளை கேட்டவர்களையும் ஆசீர்வதிக்கும்படி நான் ஜெபிக்கிறேன். ஒருக்கால் அவர்கள் விசுவாசிப்பதற்கு முரணாக நான் எதையாவது கூறியிருக்கலாம். கர்த்தாவே, என்னால் அதை விளக்கி கூற முடியாது. அது என்னால் கூடாத காரியம். ஆனால், பிதாவே நான் என் இருதயத்தில் எந்த அர்த்தத்தில் கூறுகிறேனோ, அதை அவர்கள் அறியும்படியாய் செய்வீரா-! தயவாய் செய்யும். நீர் அதை செய்யும்படி நான் ஜெபிக்கிறேன். அவர்கள் யாவரையும் சேர்த்து ஆசீர்வதியும். ஞானஸ்ஸ்நான ஆராதனைக்கு ஒரு சில நொடிகளுக்கு முன்னர், உம்முடைய வார்த்தைகாக நாங்கள் காத்திருக்கையில், இப்பொழுது எங்களை ஆசீர்வதியும். சரியானது எதுவோ, அதையே நங்கள் பேசும்படியாய் எங்களுக்கு உதவி செய்யும். என்னுடைய தொண்டை சிறிது கரகரப்பாய் இருப்பதனால், இன்றிரவு இந்த செய்தியில் எங்களுக்கு உதவி செய்யும். எனக்கு நீர் உதவி செய்ய வேண்டுமென்றும், எங்கள் மத்தியில் வியாதியினாலும், தொல்லைகளினாலும் பாதிக்கப்பட்டிருக்கிற ஜனங்களுக்கு கூட நீர் உதவி செய்ய வேண்டும் என்றும் அன்புள்ள தேவனே நான் ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் நாங்கள் கேட்கிறோம். ஆமென்-! 62. இப்பொழுது, உங்களால் கூடுமானால், அடுத்த சில நிமிடங்களுக்கு நாம் ரோமரின் புத்தகம். 6 -ஆம் அதிகாரத்திற்கு திருப்புவோம். ஓ-! பொறும். இன்னும் அதிக கேள்விகள் இருக்கிறதென்று நான் நினைக்கிறேன். அது சரி. என்னால், இவைகளுக்கு புதன் இரவு பதிலளிக்க முடியும். அதிக நேரம் ஆகிவிட்டது என்னால் முடியவில்லை. இது வரைக்கும் இவைகள் இருக்கின்றதை நான் கவனிக்கவில்லை. இப்பொழுது நாம் ரோமர் 6. ஆம் அதிகாரத்தை வாசிப்போம்: ". ரோமர் 6:1-5 ஆகையால் என்ன சொல்லுவோம்-? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலை நிற்கலாம் என்று சொல்லுவோமா-? கூடாதே. பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப்பிழைப்போம்-? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமல் இருக்கீறீர்களா-? மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்து கொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனே கூட அடக்கம் பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர் களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.'' 63. இன்றிரவு, நான் பேசவதற்கு பொருளை எடுக்க வேண்டுமானால் சுமார், ஒரு இருபது நிமிடத்திற்கே. நான் அதை அடையாளம்". "கிறிஸ்துவோடு அடையாளம் கண்டுக் கொள்ளப்படுதல்" என்று கூற விரும்புகிறேன். உங்களுக்கு தெரியும். இன்றைக்கு தேசத்திலே எத்தனையோ அதிருப்தியடைந்த ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள் என்று.., நீங்கள் சுற்றிப்போய் பார்ப்பீர்களானால், அவ்வளவு ஜனங்கள் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள் என்பதை கண்டறிவது எவ்வளவு வியப்பாய் இருக்கும். என்ன செய்ய வேண்டுமென்பதே ஜனங்களுக்கு தெரியாதிருக்கிறது. 64. 30 மைல்கள், வேக கட்டுபாடு (speed break) உள்ள இடங்களில் அவர்கள் சுமார் மணிக்கு, 70, 80 மைல் வேகத்தில் வீதியில் வாகனத்தை ஒட்டி வருகிறார்கள். அதிலேயே பிரேக்கை அழுத்தி மூலையில் திருப்பி அவர்களுடைய வண்டி "டயர்களே" எரிந்து போகும் அளவிற்கு அதே வேகத்தில் அப்படியே துவங்குகிறார்கள். சில வீடுகளை தாண்டிச் சென்று. அங்கே போய் உட்கார்ந்து, சிறிது பேசுவதற்கு இப்படி செய்கிறார்கள். அறியாதிருக்கிறார்கள் போன்றிருக்கிறது. அவர்களில் சிலர் அவ்வளவு கலக்கம் அடைந்தவர்களாய் நேராக மருந்து கடைக்குச் சென்று. ஒரு பாட்டில் கெடுதி செய்யக்கூடிய கந்த அமிலத்தை அல்லது அதைப் போன்ற ஏதோ காரியத்தை வாங்கி தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு போகிறார்கள். அவர்கள் மரித்து கிடப்பதை காண்கிறார்கள். சிலர் ஜீவியத்திலிருந்து விடுதலைப் பெறும்படிக்கு வாயுவை அவர்களுடைய அருகில் குழாய் மூலமாய் வரவிட்டு, அல்லது அவர்களுடைய வாகனத்திலிருந்து குழாய் மூலமாய் "கார்பன் மோனாக்ஸட்டை" அறைக்குள் கொண்டு வந்து மரித்து போக முயற்சிக்கிறார்கள். சிலர் உயரமான பாலங்களில் ஏறி அல்லது மலைகளின் மேல் ஏறிப் போய், அல்லது உயரமான கோபுரத்தின் மேல் ஏறி, காகித்தில் ஒரு குறிப்பை எழுதி அவர்களுடைய சட்டைப்பைக்குள் வைத்து கொண்டு அங்கேயிருந்து நேராக குதித்து உயிரை மாய்த்து கொள்ளுகிறார்கள். சிலர் கைத் துப்பாக்கியை எடுத்து, அவர்களுடைய தலையில் வைத்து, உண்மையாகப் பார்த்தால் அவருடைய மூளையையே வெடிக்கச் செய்கிறார்கள். 66. அவர்கள் வெறுமனே அதிருப்தியடைந்தவர்கள். ஆஸ்பத்திரிகள் அதிருப்தியடைந்த ஜனங்களால் நிறைந்திருக்கிறது - புத்தி சுவாதினமற்றவர்கள் நிலையங்கள் நிறைந்து வடிக்கின்றன. அதிருப்தியடைந்தவர்கள். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். அவர்கள் எதையோ அடைய வேண்டும் போல் இருக்கிறார்கள் ஆனால், அவர்கள் அதன் அண்டைக்கு கூட வருகிறதேயில்லை . வெறுமனே அதிருப்தி நிறைந்திருக்கிறது. மட்டுமல்லாமல், தேசத்திற்கும், சபைக்கும் முதுகெலும்பாய் இருக்கின்றவைகள் குடும்பங்கள். குடும்பங்கள் உடைத்து, விவாகரத்து நீதி மன்றங்கள். விவாகரத்துகளால் நிறைந்து வடிகின்றன. 67. இளம் பிள்ளை குற்றங்கள். தாய்மார்கள் அவர்களுடைய புருஷன்களுக்கு நல்ல வேலைகள் இருக்கும் பொழுது, பிள்ளைகளை குழந்தை காப்பளனிடம் விட்டுவிட்டு, வெளியே போவது, வேலைக்கு செல்வது, எங்கேயாவது போகிறார்கள், ஆனால், அவர்களுக்கு வீட்டில் தரித்திருந்து ஒரு தாயாக இருப்பதில் திருப்தியற்றவர்களாக இருக்கிறார்கள். ஒரு நல்ல பெண்மணியைப் போன்று உடுத்திக்கொள்ள திருப்தி இல்லை. அவர்களுக்கு ஆண்களைப் போன்று உடுத்திக் கொள்ளவும், ஆண்களோ பெண்களைப்போன்று இருக்கவும் விரும்புகிறார்கள். அங்கே எங்கேயோ ஏதோ காரியம் தவறாக இருப்பதுப் போன்று தோன்றுகிறது. ஜனங்கள் எதையோ அடைய பிரயாசிக்கிறார்கள். ஆனால், அதை அவர்களால் அடைய முடியவில்லை. அந்த நிலைமைக்குள் இருப்பதென்பதே ஒரு பரிதாபமென்பதாகும். ஏதோ காரியத்தை கண்டு அவர்களை ஒரு உதாரணமாக்க அவர்கள் எல்லா இடத்தும் நோக்கிப்பார்த்தல். 68. நம்முடைய நாட்களின் சீரியலை நாம் எடுத்துக் கொள்ளுவோம். ஒரு குறிபிட்ட திரைப்பட நட்சத்திரத்தை அவர்கள் காணும் வரைக்கும், தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருப்பார்கள். அல்லது அவள் ஒரு குறிப்பிட்ட உடையை உடுத்தி கொண்டு வருவாள். எல்லா ஸ்தீரிகளும் அவளை உதாரணமாக வைத்து அவளைப்போன்றே உடுத்தி அல்லது திறந்துகொள்ள விரும்புவார்கள். சில கவர்ச்சியான பெண்கள் அவர்களுடைய ஜீவியத்தில் மலரும் காலத்தில் அவர்களுக்கு பாவணையாக இருக்க யாராவது ஒரு சினிமா நட்சத்திரத்தை தனக்கு முன்மாதிரியாய் வைத்து, அந்த விதத்தில் அவர்களுடைய ஜீவியத்தை அமைத்துக் கொள்ளுவார்கள். முடிவிலே அவர்கள் ஒரு பாவ கூட்டிற்குள்ளாக கட்டப்பட்டு அதினின்று வெளிவர கூடாமல் போகிறது. என்ன ஒரு பரிதாபம். அப்படிப்பட்டவர்கள் கண்ணீர் அவர்களுடைய கன்னங்களில் வழிய, கூட்டங்களுக்குள் வருவதை காண்கிறோம் ஆனால், அவர்கள் ஏதோ . காரியத்தை தேடிக் கொண்டிருக்கிறார்கள். 69. நாம் ஆண்களை எடுத்துக் கொள்வோம். வீதியிலோ அல்லது அவர்களுடைய வேலையிலோ நீங்கள் ஆண்களை பிடியுங்கள். வயதானவர்கள் இருபது வயதுக்கு உட்பட்டவர்கள் போல் இருக்க விரும்புகிறார்கள். முன்னால் பட்டையாக இருக்கும் படி தலைமயிரை வெட்டிக் கொண்டு, பின் பக்கமாக வாத்தின் வாலைப் போன்று வலைந்து இருக்கும்படி வெட்டி கொள்வார்கள். அவனுக்கு இருபது வயதுக்குட்பட்டவன் போல் இருக்க விருப்பம். ராக் அண்டு ரோல் (Rocle and Roll) ராஜாக்களைப் போன்று இருக்க அவன் விரும்புகிறான். 70. அவர்கள் எங்கே போய் முடிவடைகிறார்கள். பாவத்திலும் கனவீனத்திலும் முடிவடைகிறார்கள். மனிதன் அதிர்ச்சி அடைந்தவனாய் காணப்படுகிறான். அவன் எல்லா இடத்திற்கும் ஒடுகிறான் அசிங்கமாய் பேசுவது முதலான காரியங்களால் இழுப்பவைகளின் பின்னே வானொலி கேட்பதற்காக அதை எடுத்துக் கொள்ளுகிறார்கள். அவர்கள் வெளியே சென்று, அவர்களை போலவே செய்யவும், அல்லது அந்த ஜனங்களை போலவே நடந்து கொள்ளுகிறார்கள். 71. வீதியிலிருக்கின்ற ஒரு சிறு பையனை எடுத்துக் கொள்ளுங்கள் எனக்கு எப்படி அது தெரியும். அவன் ஒன்று ஒரு ஸ்பேலடினாகவோ, அல்லது ஒரு கேப்லான் கேசடி யாகவோ இருந்தாக வேண்டும். வணிக உலகம் அதை அப்படியே பற்றிக் கொண்டு, அதிலிருந்து லட்சகணக்கான டாலரை சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஒரு ராய் வேஜராகவோ, அல்லது சிறு டில்லியனாகவோ, அல்லது ஒரு தொலைக்காட்சி நடிகனாகவோ இருந்தாக வேண்டும். அந்த நபரைப் போன்று அவர்கள் நடந்து கொள்ள பாவணை செய்கிறார்கள் அவர்களுடைய ஜீவியத்தின் தரமாய் அவர்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். 72. பாதையின் முடிவிலே அவர்கள் என்ன கண்டார்கள். இந்த சிறு பையன்கள் கொள்ளைகாரரும், திருடர்களுமாகிறார்கள். ஸ்தீரிகளோ விபசாரிகளும் வீதிகளில் அலைகிறவர்களுமாகி தவறு செய்கிற ஜனங்களாக ஆகிறார்கள். ஆண்கள் சூதாடிகளாயும், தேவ பிரியராயிராமல் சுகப்போக பிரியராயும் ஆகிறார்கள். சபைகளோ, பெரிய சபைகளை பார்த்து அதை போன்று இருக்க பாவணை செய்கிறார்கள். ஜனங்கள் மத்தியில் திருப்தியில்லாமல் இருக்கிறதையே நாம் அங்கே காண்பதுப் போல் இருக்கிறது. அதை செய்யும்படியாய் அவர்கள் செய்கிறது தான் என்ன. அது ஒரு காரணத்திற்காகவே, அது ஒரு சுபாவமாயிருக்கிறது - தேவன் அந்த சுபாவத்தை அவர்களுக்கு கொடுத்தார். 73. அவர்கள் எதனோடுவாவது அதையாளம் காட்டிக் கொள்ளும்படியாய் ஏதாவது காரியம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்கிற ஒரு சுபாவத்தை அவர்கள் உடையவர்களாய் இருக்கிறார்கள். ஒரு காரியத்தைப் போன்று அவர்கள் இருக்க அவர்களுடைய ஜீவியத்தின் ஒரு நோக்கமாக இருக்க ஏதாவது காரியம் அவர்களுக்கு இருந்தாக வேண்டும். ஒரு திரைப்பட நட்சத்திரமாய், அல்லது ஓர மாட்டுக்காரப் பையனாய், அல்லது அதைப் போன்று ஏதாவது காரியமாய் அவர்கள் இருக்க விரும்புகிறார்கள். 74. நான் வீட்டிற்கு வந்துக் கொண்டிருக்கையில் வானொலியில் டென்மரில் ஏதோ ஒரு மகத்தான இத்தாலிய மனிதன் தோட்டாக்களினால் நிரப்பப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு ஆப்பிலான் கீகேசிடியை நடத்த முயற்சித்துக் கொண்டிருந்தானாம். அதற்கு பதிலாக அவனுடைய ஜீவியத்தில் அவன் ஒரு செஸ்சராக இருக்க போகிறானாம். அவனுடைய கால் முட்டியை துப்பாக்கியால் சுட்டு விட்டான். அங்கே தான் காரியம், ஆனால் தங்களை அடையாளம் காட்டிக் கொள்ளும்படியாய் ஏதாவது காரியத்தை கண்டுபிடிக்க அவர்கள் முயற்சிகிறார்கள். அவர்கள் அதை செய்வதற்கான காரணம். ஏனென்றால், அவனுக்குள்ளாக ஏதோ காரியம் இருக்கின்றது. தேவன் அவர்களை அதுவாய் உண்டாக்கியிருக்கிறார். 75. தேவன், அவர்களுக்கு ஒரு உதாரணத்தை வைத்து அதனோடு அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளும்படியாய் வைத்திருக்கிறார். அது என்னவென்றால், உன்னுடைய இரட்சகராக இருக்கும்படியாக, அவர் இயேசு கிறிஸ்துவை ஆக்கின பொழுது தான் .. அது தான் உதாரணம். அது தான் ஜனங்களுக்கு தேவை. அவரைப் போன்று இருக்கும் படியாக, அதனோடு கூட அடையாளம் கண்டுக் கொள்ளபட வேண்டும். எல்லா சிறு பையன்களும் ஆப்பிலான்க்கேசுகனாக இருக்க விரும்பினால், அல்லது மற்றவர்களில் சிலர், அல்லது சிறு பெண்கள் ஹானிவேறாக்லே முதலானவைகளை போன்று இருக்க விரும்பினால் எப்படியாகும். 76. அவர்கள் மட்டும் அதை விரும்புகின்ற அளவிற்கு அவர்கள் இயேசுவை விரும்பினால், எல்லா இடத்திலும் ஒய்வு நாள் பள்ளிகள் நிரம்பி வழியும். திரைப்பட நட்சத்திரத்தைப் போல இருக்க விரும்புகின்ற ஸ்தீரிகள் மட்டும் இயேசுவைப் போன்று இருக்க விரும்பினால், சபையானது ஏன், அவர்கள் காணிக்கை எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது. ஒரு உதாரணம் தனக்கு இருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கும்படியாய் தேவன், மனிதனை உண்டாக்கினார். தேவன் அவனுக்கு ஒரு உதாரனத்தை கொடுத்தார். அவன் அதனோடு அடையாளம் கண்டுக் கொண்டு இருக்கும்படியாய், இயேசு கிறிஸ்துவே அந்த உதாரணமாய் இருக்கிறார். 77. இப்பொழுது, நாம் அதிகமாய் அவரைப் போன்று இருப்போமானால் உலகத்தில் இத்தனை பெரிய ஆட்கள் இருக்க மாட்டார்கள். உலகத்தில் ஏதும் பசியாய் உள்ள பிள்ளைகள் இருக்க மாட்டார்கள். அங்கே ஏதோ, விஸ்கியோ அல்லது குடித்தலோ, அல்லது சூதாட்டமோ இருக்காது. அந்த விதமாய் நாம் இருக்க தேவன் ஒரு உதாரணத்தைக் கொடுத்திருக்கிறார். ஆனால் நாமோ அதைப் போன்று இருக்க மறுக்கிறோம். 78. இப்பொழுது, உலகத்தோடு காரியம் அதுவாகத் தான் இருக்கிறது. அந்த வாஞ்சை அவர்களுக்குள்ளாய் இருக்கிறது. தேவன் அதை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். ஆனால், அவர்களோ அதை தவறான வழியிலே திருப்பி விட்டார்கள். திருப்பி வந்து சரியான பாதையெடுத்து, கல்வாரியை நோக்கிக் கொண்டிருக்க வேண்டியதான நேரமாய் அது இருக்கிறது. இயற்கையானது அதை நிருப்பிக்கிறது - யாரைப் போலாவது இருக்க வேண்டும் என்ற மகத்தான நோக்கத்தோடு, மகத்தான வாஞ்சையோடு, ஒரு உதாரணத்திற்காக இந்த ஜனங்கள் இருப்பார்களேயானால், அவர்கள் கிறிஸ்துவை அவர்களுடைய உதாரணமாய் எடுத்துக் கொள்வார்களேயானால் அப்பொழுது நம்முடைய தேசத்திலிருக்கும் ஒவ்வொரு காவலனையும் கடிந்துக்கொள்ள முடியும். எல்லாரும், தாழ்மையாகவும், சாந்தமாகவும் இருப்பார்கள், எல்லாரும் தயவாயும், ஒருவருக்கு ஓருவர் சகோதர அன்பை உடையவர்களாயும் இருப்பார்கள். நம்முடைய தேசத்தில் ஒரு விவாகரத்தும் கூட இருக்காது. அங்கே சுகவீனம் என்பதே இருக்காது. எல்லாரும் இயேசு கிறிஸ்துவை அவருடைய உதாரணமாய் எருத்துக் கொள்ள முயற்சித்தால், மருத்துவமனைகளை நாம் ரத்து செய்து விடலாம். ஒன்றுக்கும் நமக்கு தேவையே இருக்காது. 79. எனவே, அந்த சுபாவம் மனிதனுக்குள்ளாக இருக்கிறது. ஆனால், அவன் அதை தவறான காரியத்தின் மேல் வைக்கிறான். அவர் சில மனிதர்களை, உங்களுக்கு தெரியும். அதாவது நாம் மாம்சத்தை நம்முடைய ஆதாரவாக்கிக் கொள்ளும் போது, நாம் சபிக்கப்பிட்டவர்களாய் இருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. உங்களுடைய மாம்சத்தை உங்களுடைய ஆதாரவாக ஆக்கும் போது, அல்லது உங்களுடைய நம்பிக்கையை மாம்சத்தின் மேல் வைக்க முயற்சிக்கும் போது, நீங்கள் சபிக்கப்பட்டவர்களாய் இருக்கின்றீர்கள் என்று வேதம் கூறுகின்றது. எவ்வளவு நன்றாய் நான் அறிந்திருக்கிறேன். அதை செய்வது அவ்வளவு சுலபமாயிருக்கிறது. அதை செய்ய அதிக காரனமாய் இருக்கின்றது இது தான். அவலட்சணமான பத்திரிக்கைளால் நம்முடைய செய்தி பலகைகள் நிரம்பியிருப்பதும், வீடுகள் இப்படிப்பட்ட படங்களால் நிறைந்திருப்பதுமே காரணமாகும். 80. நம்முடைய செய்தி திரைகள் தணிக்கை செய்யப்படாததினால் தான் அவைகள் விரைவாய் திறக்கப்பட்டிருக்கிறது. எந்த விதமான ஆபாச துணுக்குகளை கூறுதலும், அல்லது பயங்கரமான காரியங்களை செய்தலேயாகும். இது நம்மிடையே சுத்தமே இல்லை. அதைக் குறித்து நான் மிகவும் கடினமாய் பேசுகிறேன் என்று நீங்கள் நினைக்கிறிர்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், யாராவது கடினமாகுதலின் பேரில் இருக்கத் தான் வேண்டும். அதைச் செய்தாக வேண்டும். 81. நான் சிறு பையனாய் இருந்தப் போது, மனித குரங்காகிய " டார்ஜான்" என்ற புத்தகத்தை நான் வாசித்திருக்கிறேன். என்னுடைய தாயார் ஒரு பழைய தோல் ஜமக்காளத்தில் வைத்திருந்தார்கள். திருமதி.வீவேகன் அதை அவர்களுக்கு கொடுத்து இருந்தார்கள். நான் அதை வெட்டி எனக்கு ஒர் ஒரு டார்ஜான் ஆடையை உண்டாக்கி கொண்டு, ஒரு வாரமாய் ஒரு மரத்திலே தொங்கினேன். நான் ஒரு டார்ஜானாக இருக்க விரும்புபினேன். நான் லோன் ஸ்பார் ரேன்ஜர் (lon star Renger) என்ற புத்தகத்தை படித்த போது, என்னுடைய வழக்கமான குதிரையாயிருந்த துடைப்பத்தின் மேல் சவாரி செய்து லோன் ஸ்டார் சேன்ஜராக இருக்க முயற்சித்துக் கொண்டிருந்தேன் ஜனங்கள் என்ன செய்வார்களோ அதைக் காட்டிலும் அது அதிகமானது அல்ல, அது நீங்கள் என்ன படிக்கின்றீர்களோ அதுவாயிருக்கிறது. நீங்கள் என்ன இன்னிசைக்கு செவிக் கொடுக்கிறீர்களோ அதுவாய் இருக்கிறது ஒரு உணவகத்திற்கு போங்கள். அந்த பழைய ராக் அண்டு ரோல் பாடல்கள்... ஜனங்கள் பைத்தியமாய் போகிறதில் வியப்பு ஓன்றுமில்லை மனித வர்க்கத்தை பைத்தியமாய் இருக்க அவனை தள்ளுவதற்கு அது போதுமானதாய் இருக்கிறது. 82. ஆனால் ஒ-! நான் ஒரு நாள் இயேசுக் குறித்து வாசிப்பதற்கு நித்தியம் முழுவதுமாக நான் நன்றியுள்ளவனாய் இருப்பேன். அது என்னை திருப்தி ஆக்கினது - நான் அவரைப் போல் இருக்க விரும்புகிறேன். அதுவே என்னுடைய வாஞ்சையாய் இருக்கிறது. மறு கன்னத்தை திருப்பிக் காட்ட கூடியவனாய் இருக்க அல்லது அவனோடு இரண்டாவது மைல் நடக்க கூடியவனாய் இருக்க விரும்புகிறேன். எல்லா வினோதமானவைகளும் எனக்கு எதிராக இருக்கும் பொழுது, யாருக்கும் எதிராக ஏதும் உடையவனாய் இல்லாமல் மன்னிக்க கூடியவனாய் இருக்க விரும்புகிறேன். 83. உன்னுடைய சரியான கிரியைக்கு அவர்கள் சரியாகவோ, அல்லது தவறாகவோ அவர்கள் உன்னை நடத்தினாலும், அவர்களை இன்னுமாய் நேசிக்க கூடியவனாய் இருக்க விரும்புகிறேன். அந்த விதமாக தான் நான் இருக்க விரும்புகிறேன். அந்த வித நபராய் தான் நான் இருக்க விரும்புகிறேன். என் மீது கோபங்கொண்டு திட்டும் பொழுது நான் திரும்பி அதையே செய்யாமல் இருக்க கூடியவனாக இருக்க விரும்புகிறேன். அந்த விதமான உதாரணத்தை தான் தேவன் நமக்கு இயேசு கிறிஸ்துவில் கொடுத்து இருக்கிறார். நாம் அவரோடு அடையாளம் கண்டுக் கொள்ளபட வேண்டியவர்களாய் இருக்க வேண்டும். நாம் அப்படியாய்; தான் இருக்கிறோம். சகோ. பிரன்ஹாம் நீர் எப்படி அவரோடு அடையாளம் கண்டு கொள்ளும் படி ஆனீர் என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் ஹாலிவுட் (Holly wood) நட்சத்திரங்களைப் போல் உடுத்தியாக வேண்டும். மற்ற காரியங்களை செய்தாக வேண்டும். அது இயேசு கிறிஸ்துவோடு அடையாளம் கொண்டு கொள்ளும்படியாய் நீர் எப்படி ஆனீர்-? 84. முதலாவது நீங்கள் ஏற்கனவே செய்தவைகளுக்காக மனந்திருந்த வேண்டும். அதன் பின்னரே, இந்த தண்ணீர் தொட்டியில் இங்கே நீங்கள் அவரோடே அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறிர்கள். சந்தேகமேயில்லை. ஆனால், ஒரு சில நிமிஷங்களில் அநேக பேர்கள் அவரோடு அடையாளம் கண்டு கொள்ளப்படுவீர்கள். தண்ணீர் தொட்டியில் நீங்கள் ஞானஸ்நானத்தில் அவரோடு அடையாளம் கண்டுக் கொள்ளமுடியும். ஏனென்றால், நாம் கிறிஸ்துவுகுள்ளாக அடக்கம் பண்ணப்பட்டிருந்தால், நாம் அவருடைய மரணத்திலும், அடக்கத்திலும், உயிர்தெழுதலிலும் அடையாளம் கண்டு கொள்ளப்படுகிறோம். அதின் நிமித்தமாகத்தான் நாம் ஞானஸ்நானம் பண்ணப் படுகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தையும், அடக்கத்தையும், உயிர்தெழுதலையும் விசுவாசிக்கிறோம் என்பதை சாட்சி பகரவே நாம் தண்ணீருக்குள் கீழாக போய் மீண்டுமாக வெளியே வருகிறோம். நாம் அவருடைய சாயலிலும், அவருடைய மரணத்திலும், நடப்பட்டிருப்போமானால் உயிர்த்தெழுதலில் நாம் அவரைப் போன்று இருப்போமென்று தேவன் நமக்கு ஒரு வாக்குதத்ததை அளித்திருக்கிறார். 85. ஒரு திரைப்பட ராணியோடு உன்னை அடையாளங்கண்டுக் கொண்டு, நீ எங்கே இருப்பாய் என்று பார்-? உங்களை ஏதோ ஒரு மாட்டுக்கார பையனோடு அல்லது ஏதோ 20 வயதுக்குட்பட்டவனோடு அடையாளங்கண்டுக் கொண்டு நீ எங்கே இருக்கின்றாய் என்று பார்-? ஆனால், இன்றிரவு நான் உங்களிடத்தில் சவால் இடுகிறேன். உங்களை இயேசு கிறிஸ்துவோடு அவருடைய மரணத்திலும், அவருடைய உயிர்தெழுதலிலும் அடையாளங்கண்டுக் கொண்டு உயிர்தெழுதலிலும் நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று பாருங்கள். 86. நாம் அவரோடுக்கூட பாடுகளை சகித்தோமானால், அவரோடுகூட ஆளுகையும் செய்யும் தேவன் நமக்கு வாக்குத்தத்தத்தை கொடுத்திருக்கிறார். என்னுடைய முழு வாஞ்சையும், நான் அவரைப் போல் இருக்க வேண்டும் என்பதே. ஓ-! கர்த்தாவே என்ன எழுத்தும், என்ன வார்த்தையும் என்னை உருவாக்கும் - மீண்டுமாய் என்னை கொண்டு வாரும். குயவனுடைய வீட்டிற்கு சென்ற அந்த தீர்க்கதரிசியைப் போன்று என்னை நொறுக்கி மீண்டுமாய் உருவாக்கும். 87. பழைய ஏற்பாட்டில் தேவனுடைய வீட்டில் ஒரு மனிதன், தான் அடையாளங்கண்டு கொள்ள விரும்பும் பொழுது, அவனால் தெரிந்துக்கொள்ள கூடிய மிகவும் நிரபராதியான ஒன்றை ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு போவான். அந்த ஆட்டுக் குட்டியானது பாவம் இல்லாதது என்று அவன் அறிந்திருக்கிறான். ஏனென்றால், அது எந்த பாவத்தையும் அறியாததாய் இருந்தது. அந்த ஆட்டுக்குட்டியை கொண்டு வந்து என்னுடைய கரத்தை அதன் தலையின் மேல் வைத்து அவனுடைய பாவங்களை அறிக்கை செய்தான். விசுவாசத்தினால் அவனுடைய பாவங்கள் அனைத்தையும் அதன் மேல் மாற்றுகிறான். அந்த குட்டியின் குற்றமற்ற நிலைமை இவன் மேல் மாற்றப் படுகிறது. அதன் பின்னர், அந்த ஆட்டுக்குட்டியானது மரிக்கிறது. ஏனென்றால், அது ஒரு பாவியாய் இருக்கிறது. விசுவாசத்தின் கிரியையினால் தேவன் சொன்னதற்கு கீழ்படிந்த படியினால் அந்த மனிதன் ஜீவிக்கிறான். ஆனால், அவன் என்ன செய்தான்-? எந்த வாஞ்சைகளோடு ஆலயத்திற்குள் வந்தானோ, அதே வாஞ்சைகளோடு திருப்பி வெளியே சென்றான். 88. ஏனென்றால், அந்த இரத்தம் அணுவாக உடைக்கப்பட்ட போது, அதிலிருந்து தான், அந்த ஒரு இரத்த செல்லிருந்து தான் இரத்தம் துவங்கினது. அந்த இரத்த செல்லானது உடைக்கப்பட்ட போது, அந்த ஆட்டுக்குட்டியின் ஜீவன், மனித ஜீவனோடு அதே நேரத்தில் சந்திக்கவில்லை. அல்லது இவனுக்குள் திரும்பி வர முடியவில்லை. ஏனென்றால், அது ஒரு மிருக ஜீவனாயிருந்தது. மனிதன் அதினிடத்திலிருந்து அதே வாஞ்சைகளோடு திரும்பி சென்றான். எனவே, அவன் தொடர்ந்து பாவங்களை மீண்டும். மீண்டுமாய் செய்து கொண்டே வந்தான். 89. ஆனால், அங்கே ஒரு நேரம் வந்தது. அப்பொழுது தேவன் நம்மை ஒரு உதாரணமாய் ஆக்கி, அவர் நமக்கு கர்த்தராகிய இயேசுவை கொடுத்தார். ஒரு பாவியானவன் அவனுடைய கரங்களை அவருடைய விலையேறப்பெற்ற தலையின் மேல் வைத்து, அவனுடைய பாவங்களை அறிக்கை செய்தால், அவனுடைய பாவங்கள் மறுரூபம் ஆகின்றது . அல்லது பாவியினிடத்திலிருந்து இயேசுவினிடத்திற்கு மாற்றப்படுகின்றது. இயேசுவினுடைய குற்றமில்லாமை திரும்பி அந்த மனிதனிடத்திற்கு, பரிசுத்த ஆவியினால் இடமாற்றப்படுகிறது. கிறிஸ்து இயேசுவுகுள் அவன் ஒரு புதிய சிருஷ்டியாக ஆகிறான். அங்கே தான் நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட விரும்புகிறேன். பாவமறியாத அவர் நமக்காக பாவம் ஆக்கப்பட்டார் என்று வேதம் நமக்கு கூறுகின்றது. அவர் பாடு அனுபவித்ததற்கு நம்முடைய பாவமே காரணமாய் இருந்தது. 90. அறியாததைக் காட்டிலும் அது அதிகமானதல்ல; நம்முடைய தகுதியை காட்டிலும் அது அதிகமானதல்ல. இந்த காரியங்களையெல்லாம் நோக்கிப் பார்த்து, நமக்கு இருக்கின்ற இந்த வாஞ்சைகள் நாம் அவரைப் போன்று இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை நாம் உடையவர்களாய் இருக்கும்படிக்கு, அந்த வாஞ்சையை நமக்குள்ளாக சிருஷ்டிக்கும்படியாக தேவன் இதை நமக்குள்ளாக வைத்தார். 91. இப்பொழுது, உண்மையான வாஞ்சை உங்களை ஆழ்ந்து கொள்ளும் முன்னதாக விசுவாசத்தினால் உங்களால் மட்டும் அதைக் காண முடிந்தால், ஞானஸ்நானத்தோடு அவரோடு அடையாளங்கண்டு கொள்ளும்படியாய் முன்னாக வாருங்கள். 92. அப்பொழுது, அவருடைய மரணத்தின் சாயலுக்குள் நடப்பட்டு இருப்பது போன்று , உயிர்தெமுதலில் அவருடைய சாயலுக்குள்ளும் நீங்கள் பகிர்ந்து கொள்ளுவீர்கள். ஏனென்றால், அவர் பாதாளத்திலிருந்து வந்த பொழுது, பாதாளத்திற்குள்ளாக சென்ற அதே இயேசுவாக அவர் இருந்தார். நாம் இயேசு கிறிஸ்துவுக்குள்ளாக இருந்தால், நாம் எப்படி அதற்குள்ளாக பிரவேசிக்க முடியும். பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் அந்த நாளில் நாம் வெளி வந்து அவருடைய உயிர்தெழுதலில் பங்கடைவோம். 93. வருடங்களுக்கு முன்பாக நாம் வழக்கமாக ஒரு சிறிய பாட்டு இங்கே பாடுவோம். "இயேசுவைப் போலிருக்க" "இயேசுவைப் போலிருக்க" இப்பூமியின் மேல் நான் அவரைப் போலிருக்க ஏங்கி கிடக்கிறேன் என் ஜீவிய கால பிரயாண முழுவதுமாக பூமியிலிருந்து மகிமை மட்டுமாக அவரை போன்று இருக்க வேண்டும் என்று நான் கேட்கிறேன் . பெத்லகேம் மாட்டுத் தொழுவத்திலிருந்து ஒரு அந்நியன் புறப்பட்டு வந்தார். உலகத்துக்கு அந்நியன் . இப்பூமியின் மேல் நான் அவரைப் போலிருக்க ஏங்கி கிடக்கிறேன். என் ஜீவிய கால பிரயாண முழுவதுமாய் பூமியிலிருந்து மகிமை மட்டுமாக அவரைப் போன்று இருக்க வேண்டுமென்று நான் கேட்கிறேன். 94. அவருடைய சாந்தத்தில் பங்கு பெறுங்கள். அவருடைய மகிமையிலும் நீங்கள் பங்கடைவீர்கள். அவருடைய கீழ்படிதலில் பங்கு பெறுங்கள். அவருடைய உயிர்தெழுதலிலும் நீங்கள் பங்கடைவீர்கள். செய்யுங்கள் என்று தேவன் கூறினதை செய்யுங்கள். இயேசுவைப் போன்று இருப்பது அவரோடு அடையாளம் கண்டுக் கொள்ளப்படுவது. இதுவே, நான் என்னுடைய இருதயத்தில் சிந்திக்க கூடிய மகத்தான காரியமாய் இருக்கிறது. 95. அதன் காரணமாகத்தான் நான் ஜனங்களுக்கு இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுக்கிறேன் ஏனென்றால், அவரே நம்முடைய அடையாளமாய் இருக்கிறார். நாம் அந்த அடையாளத்தை சுமக்கிறோம். வார்த்தையினாலாவது கிரியையினாலாவது நீங்கள் எதை செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாக பிதாவாகிய தேவனை ஸ்தோத்தரியுங்கள். ஞானஸ்நானத்திலே நாம் அவரோடு அடையாளங்கண்டு கொள்ளப்படுகிறோம். 96. இன்றிரவு, இன்னும் சில நிமிடங்களில் நாங்கள் ஞானஸ்நாணம் கொடுக்கப் போகிறோம். இங்கே , இந்த அறையில் இருக்கும் ஜனம், இங்கே ஞானஸ்நானம் பெறப் போகிறார்கள். உலக பிரகாரமான ஏதாவது மகத்தான குறிக்கோள் உங்களுக்கு விருப்பமாக இருக்கின்ற ஏதாவது வாஞ்சை உங்களிடத்தில் இருக்குமானால், இப்பொழுதே அவைகளிலிருந்து மனந்திரும்புங்கள். ஏதோ, மகத்தான உலக பிரகாரமான நபராக இருக்க வேண்டுமென்று விரும்பினதற்காக நீங்கள் வருந்துகிறீர்கள் என்று தேவனிடத்தில் கூறுங்கள். கர்த்தாவே, என்னுடைய முழுமையான நோக்கமே நான் இயேசுவைப்போல் இருக்க வேண்டும் என்பதே என்று கூறுங்கள். சாந்தமாகவும், தாழ்மையாகவும் வாருங்கள் அப்பொழுது நீங்கள் உங்களுடைய கரத்தை . அவருடைய சிரசின் மேல் வைத்து, விசுவாசத்தினால் உங்கள் பாவங்களை அறிக்கை செய்து, கர்த்தாவே, நான் இதை செய்ததற்காக வருந்துகிறேன் என்று கூறுங்கள். அப்பொழுது என்ன சம்பவிக்கும். 97. தேவன் உங்களுடைய குற்றத்தையெல்லாம் அவர் மேல் இடமாற்றி அவருடைய குற்றமில்லாமையை எடுத்து உங்கள் மேல் இடமாற்றுவார். நீங்கள் தேவனுடைய சமூகத்தில் நீதிமானாக்கபட்டவனாய் நிற்பீர்கள். ஏனென்றால், நீங்கள் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசமாய் இருக்கிறீர்கள். என்ன ஒரு இரட்சிப்பின் திட்டம்-? நீங்கள் அப்பொழுது அவருடைய மகிமையில் பங்கு பெறுவீர்கள். தேவனுடைய நன்மை உங்களுடைய இருதயத்துக்குள் வரும். அவருடைய உயிர்தெழுதலின் வல்லமை உங்களை ஒரு புதிய நபராக்கும். இது எல்லா ஏக்கத்தையும் திருப்தியாக்கும். நான் ஒரு சிறு பையனாயிருந்த போது எல்லா காரியங்களையும் நான் செய்ய முயற்சித்தேன். நான் செய்ய போதுமானவனாயிருந்த எல்லா காரியத்தையும் நான் செய்தேன். நான் செய்வதற்கு போதுமானவனாய் இல்லாத அநேக காரியங்களை நான் செய்ய முயற்சித்து, வேட்டை ஆடுவதை நான் வழக்கமாக நேசிப்பேன். நான் நேசிக்கிறேன். அது தான் அது என்று நினைக்கிறேன் நான் அதைக் குறித்து சிந்தித்தேன் என்னுடைய தகப்பனார் ஒரு குதிரை சவாரி செய்பவர். எனவே, நான்.என்னால் மட்டும் மேற்கே போகமுடிந்தால் அவருடைய குதிரைகளை வளர்க்க முடிந்தால் . . என்று நினைப்பேன். 98. ஆனால், சகோதரனே ஒரு சமயம் அங்கே உயரே அரிசோனா மலையின் மேல், ஒரு இரவு ஒரு மந்தை கால்நடையை நான் மடக்கி கீழே கொண்டு வந்தேன். நான் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். ப்பிளிம் என்ற பெயருடைய ஒரு பையன், ஒரு பழைய தலைவாரும் சீப்பை வைத்து, அதன் மேல் ஒரு துண்டு காகிதத்தை வைத்திருந்தான். அவன் அதில் வாசித்து கொண்டிருந்தான். டெக்ஸாலிருந்து வந்ததான இன்னொரு பையன் அங்கே கிட்டாரை (Gitar) தட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் ஒரு ஞானப் பாட்டை வாசித்தனர். நான் என்னுடைய குதிரை சேணத்தை கழற்றி அதை என் தலையணையாக வைத்து படுத்துக் கொண்டிருந்தேன். எனக்கு மேலாக என்னுடைய போர்வையும், நான் அதற்குள்ளாகயுமாக இருந்தேன். என்னுடைய காலணிகளை நான் அணிந்தவாறே இருந்தேன். அதிலிருந்து இரும்பு துண்டு, பாதரட்சையை தலைக்கு மேலாக இருக்கும்படி செய்தது. 99. என்னுடைய இரட்சகர் மரித்த சிலுவையின் கீழ், அங்கே இருந்து தான் என் பாவத்தின் சுத்திகரிப்புக்காக நான் அழுதேன். அங்கே தான் என் இருதயத்தில் இரத்தம் பூசப்பட்டது அவருடைய நாமத்துக்கு மகிமை உண்டாவதாக என்று அவன் வாசிக்க துவங்கினான். நான் என்னுடைய போர்வையை மேலாக இழுத்து என்னுடைய காதுகளை மூடிக்கொண்டேன். நான் மேல் நோக்கி பார்த்தேன். நட்சத்திரங்கள் கீழாக தொங்கி கொண்டிருந்தது. அங்கே மலைகளின் மேலிருந்த அந்த பைன் மரங்கள். "ஆதாமே நீ எங்கே இருக்கின்றாய்"-? என்ன மெதுவாக கூறினதுப் போன்று தோன்றினது. ஒ-! கால்நடை வளர்ப்பது என்பது ஒரு இரண்டாவது காரியமாகும். நான் தேவனை தேட விரும்புகிறேன். அங்கே, எங்கேயோ என்னுடைய குதிரை சவாரி காலணிகளோடு தரையில் படுத்து கிடந்த நான், ஐயா, நீர் யார் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், அந்த உண்மையான காரியத்தை நான் கண்டுபிடிக்கும் வரைக்கும் என்னை தண்டியாதேயும் என்று கூறினேன். அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, கீழ் பட்டிணத்தில் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தேன். கால்நடைகளை மடக்கி வளைத்து கொண்டு வந்த சில நாட்களுக்கு பின்னர். நான் அங்கே ஒரு பூங்காவில் (park) பென்ஞ்சில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். சிறிய ஸ்பானிய பெண் ஒருத்தி என் அருகே வந்தாள். நான் அங்கே உட்கார்ந்து கொண்டு, தேவனை குறித்து, அது என்னமாய் இருக்கும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். 100. ஒரு சிறிய பெண் என்னருகே வந்தாள். அப்பொழுது நான் சுமார் பதினெட்டு வயதுள்ள வாலிபனாயிருந்தேன். அவள் தன் கைக்குட்டையை கீழே போட்டு விட்டு அப்படியே நடந்து சென்றாள். நான் உடனே ஸ்தீரியே. நீ உன் கைக்குட்டையை கீழே போட்டு விட்டாய் என்றேன். தேவனைப் பற்றின என்னுடைய சிந்தனைகள், என்னுடைய வாஞ்சையை மாற்றின. என்னுடைய ஏழை ஐரிஸ் இருதயமானது பசித்து கொண்டிருந்தது. எனக்கு ஏதாவது காரியம், என்னை திருப்திபடுத்தக்கூடிய ஏதாவது காரியம் தேவையாயிருந்தது. உலக முழுவதுமாக ஆப்பிரிக்கா, இந்தியா மலைகளின் ஊடாக, கனடா (Canada) முதல் வேட்டையாடும் சிலாக்கியத்தை தேவன் எனக்கு கொடுத்திருக்கிறார். மகத்தான சில பயணங்களில் உலக சாதனைகளை செய்து இருக்கிறேன். அதெல்லாம் சரிதான். ஆனால், அதை உன்னுடைய ஆத்துமாவுக்குள் அனுப்பும் படியாக எடுத்துக் கொள்ளப்பட்ட ஜீவிக்கின்ற தேவனுடைய வல்லமையின் ஸ்தானத்தை எடுத்து கொள்ள அங்கே ஏதும் காரியம் கிடையாது. 101. நான் அங்கே சேரும்போது எனக்கு மலைகளை பிடிக்கும். சூரிய அஸ்தமனம் எனக்கு பிடிக்கும். குதிரையை விட்டு கீழேயிறங்கி அதை ஓரு பக்கமாக கட்டிவிட்டு, மேலாக ஏறி, மலைகளின் உச்சிக்கு சென்று, ஒரு சில நாட்கள் அங்கே தங்கி, சூரிய அஸ்தமனத்தை கவனித்து கொண்டிருப்பேன். கழுகின் கீச்சிடும் சத்தத்தை கேட்டு கீழே இறங்கி வருவேன். 102. அது நன்றாக இருக்கும். நான் அங்கே இருக்க விரும்புவேன். ஆனால், சகோதரனே. என்னுடைய இருதயமோ அசுத்தம், அசுத்தம் அசுத்த ஆவிகள் அவனை தொந்தரவு செய்கின்றன. இயேசுவானவர் வந்து தங்கும் போது. எல்லாம் சரியாகி விடும் என்பதை நினைக்கும் போது, அது துதிக்கவும், குடிக்கவும் துவங்கும். நான் வியாதியாய் உள்ள ஜனங்களை, அந்த அழைப்பை நான் நினைக்க துவங்குவேன் அங்கே ஏதோ காரியம் எனக்குள்ளாக இருந்து கொண்டு இப்பொழுதே இந்த மலைகளை விட்டு வெளியேறு, நீ அங்கே ஜனங்களிடத்திற்கு போ என்று சத்தமிடும். 103. அவருடைய ஜனங்கள் மத்தியில், அவருடைய ஊழியக்காரன் என்று நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட நான் விரும்புகிறேன். ஒ-! அவரோடு நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட நான் எவ்வளவாய் விரும்புகிறேன். பின்னர், அது சம்பந்தமாக அவர் நமது மத்தியில் திரும்பி வந்து, நம்மோடு அவரை அடையாளம் காட்டுகிறார். நண்பனனே-! இன்றிரவு அவர் இங்கே இருக்கிறார். இப்பொழுது, ஞானஸ்நான ஆராதனையை துவக்குவதற்கான நேரமாய் இது இருக்கிறது. இன்னும் பத்து நிமிடங்களில் துவங்கும். நாம் அதை செய்வதற்கு முன்னதாக, நான் இந்த ஒரு காரியத்தை உங்களுக்கு, அதை துவங்குவதற்கு முன்னதாக கூறுகிறேன். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, இன்னும் அதிகமான காரியங்களை நான் கூற விரும்புகிறேன். ஆனால் எனக்கு போதிய நேரமில்லை. 104. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவானார் அவருடைய வார்த்தையில் அவரை அடையாளம் காட்டுக்கிறார். தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து வகையறுத்தலை தந்ததின் மூலமாக, அவரை இன்று காலை கூட்டத்தில் அடையாளம் காட்டினார். ஒரு பாவியை பாவத்தின் அடிமட்டத்திலிருந்து ஒரு புதிய மனிதனாக, ஒரு புதிய சிருஷ்டியாக கொண்டு வந்ததில், அவர் தம்மை தாமே அடையாளம் காட்டுகிறார். மிகவும் கீழ்தரமான ஒரு ஸ்தீரியை, அல்லது கீழ்தரமான ஒரு மனிதனை குடிகார.., மதுபானப் பிரியன் அது என்னவாய் இருந்தாலும் சரி, அதிலிருந்து எடுத்து, அவர்களை சரிப்படுத்தி, ஒரு நல்ல மனிதனாகவோ அல்லது ஸ்தீரியாகவோ ஆக்குங்கள். அது என்னுடைய கர்த்தர். வியாதியாயும், பாதிக்கப்பட்டவனாயும், நம்பிக்கையே இல்லாதவனுமான மனிதனை எடுத்து, அவனை மீண்டுமாய் ஒரு புதிய வாழ்விற்கு உயர்த்துவது. பின்னர் நமது மத்தியில் அதே இயேசுவாகத்தோன்றி, நம்முடைய இருதயத்தின் நினைவுகளை வகையறுக்க அவரைத் தாமே அடையாளங்காட்டுகிறார். 105. நம்முடைய மத்தியிலே அவருடைய ஜனங்களுக்குள் நின்று, தேவன் அவருடைய ஜனங்களுக்குள் இருந்து, அவரை தாமே அடையாளம் காட்டுகிறார். அவர், இப்பொழுது, இங்கே அதே பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார். ஞானஸ்நானத்திற்காக நாம் அந்த கூட்டத்தை இங்கே துவக்குவதற்கு முன்னதாக, சகோதரர்கள் ஆயத்தம் பண்ணிக் கொண்டிருக்கையில், இதைக் குறித்து நான் வியக்கின்றேன். வியாதியாய் இருந்து இன்று காலையில் ஜெபித்து கொள்ள முடியாதவர்களாய் யாராவது இங்கே இருக்கிறார்களா-? என்று நான் வியக்கின்றேன். உங்களுடைய கரங்களை நாங்கள் காணட்டும். நீங்கள் வியாதியாய் இருந்து தேவை இருக்குமானால், இன்று காலையில் ஜெபித்துக் கொள்ள முடியாமல் போயிருந்தால் உங்களுடைய கரங்களை உயர்த்தி காட்டுங்கள். 106. ஜெப அட்டைகள் அல்லது ஒன்றுமே இல்லாதவர்கள், வியாதியாயும், பாதிக்கப் பட்டவர்களாயும் இருப்பவர்கள் கரத்தை உயர்த்துங்கள். சரி, நாம் ஒரு நிமிடம் இப்பொழுது நம்முடைய தலைகளை வணங்குவோம். "கர்த்தாவே, இருகியுள்ள இந்த தொண்டையோடும், கரகரப்பான சத்தத்தோடு நாங்கள் உம்மோடு அடையாளம் கண்டு கொள்ளும் படியாய், எப்படியாவது வித்து, இந்த ஜனங்களுடைய இருதயங்களுகுள்ளாக மூழ்கும்படி செய்ய வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஏனென்றால், இந்த பூமியின் மேல் அது ஒரு பழமையான பழமொழியாக இருக்கிறது. பறவையானது அதன் சிறகுகளால் அறியப்படும் என்றும், ஒரு மனிதன் அவனுடைய கூட்டாளிகளால் அறியப்படுவான் என்றும் இருக்கிறது. அன்புள்ள பரலோக பிதாவே, நீர் எங்களுடைய கூட்டாளியாய் இருக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். 107. இந்த பூமியின் மேல் எங்களுக்கு இருக்கின்ற எல்லா காரியங்களின் கிரயமாக இருந்தாலும் சரி, கர்த்தாவே, நாங்கள் உம்மை உடையவர்களாய் இருப்போமாக. அந்த மனிதன் உண்மையாகவே தேவனோடு ஜீவிக்கிறான் தேவன், அவனுடைய கூட்டாளியாக இருக்கிறார். என்பது போன்றதில் நாங்கள் அடையாளம் கண்டு கொள்ளப்படுவோமாக. 108. அலங்கார வாசலில், பேதுருவும் யோவானும் கடந்து சென்ற போது, அவர்களுக்கு இருந்ததுப் போன்று கூறப்படுவதாக. அதாவது, என்னிடத்தில் பணம் கிடையாது ஆனால் என்னிடத்தில் உள்ளதை நான் உனக்கு தருகிறேன் என்றார்கள். அதைப் போன்று. அந்த சப்பாணியானவன் சுகமாக்கப்பட்டான். நியாய சங்கத்துக்கு முன்பாக அவர்கள் படிப்பறியாதவர்கள் என்றும், பேதமையுள்ளவர்கள் என்றும் ஜனங்கள் அறிந்து இருந்தார்கள். அவர்களுக்கு கல்வி கிடையாது. ஆனால், அவர்கள் சரியான கூட்டாத்தாரோடு இருந்தார்கள் என்று, அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார்கள். அவர்கள் இயேசுவோடு இருந்தார்கள். தேவனே, அது தான் என்னுடைய இருதயத்தின் வாஞ்சையாய் இருக்கிறது. உம்மோடு அடையாளம் கண்டுக் கொள்ளப் படவேண்டும். உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவன் என்று, உம்மை நேசிக்கிறவர்களில் ஒருவன் என்று, உமக்கு உண்மையாய் இருக்கின்ற ஒருவன் என்று, உம்முடைய புஸ்தகத்தில் இருப்பவைகளையே கூறுபவன் என்று, என்னால் செய்ய முடிந்த எல்லா காரியங்களையும் சரியானதையே செய்கிறவன் என்று அடையாளம் கண்டுக் கொள்ளப்பட வேண்டும். 109. இப்பொழுது பிதாவே, இந்த ஜனங்கள் ஒருக்கால், இது ஏதோ காரியமல்ல என்றும், ஏதோ விசேஷமான காரியம் என்றும் அல்லது எந்த விதமான முறையிலே ஏதோ காரியம் என்றும் அறிந்து கொள்ளும்படிக்கு, கர்த்தாவே இன்றிரவு நீர் மீண்டுமாய், உம்மையே எங்கள் மத்தியில் அடையாளம் காட்டும். இன்று காலையில் இங்கேயிருந்த அதே தேவன் தான் நீர். அதே வல்லமையை உடையவராய் இருக்கீறீர் என்றும், இன்று காலையில் நீர் செய்த அதே கிரியைகளை, இந்த இராத்திரியில் செய்ய முடியும் என்று, அவைகள் இந்த நாளில் சம்பவிக்கும் என்று, நீர் வாக்களித்திருக்கிறீர் என்றும், இந்த இரவில் அறியும்படியாய் செய்யும். இங்கேயிருக்கின்ற அநேகரால் போதுமான விசுவாசத்தைப் பெற்று கொள்ளமுடியவில்லை. நீர் அவர்களுக்கு இப்பொழுது, விசுவாசத்தை கொடுக்கும்படியாய் நாங்கள் ஜெபிக்கிறோம். 110. என்னை விசுவாசிக்கிறவர்கள் நான் செய்யும் கிரியைகளை அவர்களும் செய்வார்கள் என்று நீர் கூறியிருக்கிறபடியால், எங்கள் மத்தியில் உம்முடைய ஆவியானது அடையாளம் கண்டு கொள்ளும்படியாய் செய்யும் எனவே, இன்றிரவு நீர் எங்களோடு இருக்கிறீர். எங்களை இன்னமும் நேசிக்கிறீர் என்று நீர் அடையாளம் காட்ட வேண்டும் என்று தேவனே நான் ஜெபிக்கிறேன். இன்றும் ஞானஸ்நானம் பெறாமல் இங்கேயிருக்கின்ற ஒவ்வொருவரையும் வந்து உம்மோடு அடையாளம் கண்டுக் கொள்ளும்படியாய் நீர் விரும்புகிறீர். அவர்களும் கூட ஒருக்கால் இந்த அற்புதமான இடம் மாற்றிக் கொள்ள கூடிய கிருபைக்கு பங்காளிகளாவார்களாக-! நம்மிடத்திலிந்து அவருக்கு, அவரிடத்திலிருந்து நம்மிடத்திற்கு. நம்முடைய குற்றத்தை அவரிடத்திற்கு. அவருடைய கிருபையை நம்மிடத்திற்கு மாற்றிக் கொள்ள. இதை அளியும் கர்த்தாவே. எங்களுடைய ஜெபத்தை கேளும். உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென்-! 111. தேவனுடைய நீதி நிழலிலே நாங்கள் நின்றுக் கொண்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இரண்டு அல்லது மூன்று பேர்கள் கூடுகின்ற ஒவ்வொரு நேரத்திலும் அவர்கள் மத்தியில் அவர் இருப்பேன் என்று வாக்களித்திருக்கிறார். இப்பொழுது எனக்கு தெரியாது, ஜெப அட்டைகளில் ஒரு பகுதி உயரே கொண்டு போகப்பட்டாயிற்று. என நான் யூகிக்கிறேன். உங்களில் சிலர் அதை இன்னமும் வைத்திருக்கலாம். உங்களில் அநேகர் ஜெப அட்டைகள் இல்லாமலேயும் இருக்கலாம். உங்களிடத்தில் அது இருக்கிறதா, அல்லது இல்லையா, என்பதினால் ஒன்றுமில்லை. நீங்கள் வியாதியாய் இருந்தால், நீங்கள் வியாதியாய் இருக்கிறீர்கள் இந்த வேதாகமத்தை எழுதிய இந்த தேவன். அவரை நீங்கள் பயபக்தியாய் விசுவாசிக்கிறீர்களா-? அவர் மீண்டுமாய் உங்கள் மத்தியில் திரும்பி வந்து, வார்த்தையை பிரசங்கிப்பதுல்லாமல், அவர் இங்கே இருக்கிறார் என்றும், அவர் இங்கே இருக்கிறார் என்று, பாவிகளை நம்ப செய்யும்படியாய் அவரையே நிருப்பித்தால் .வியாதியஸ்தரை சுகப்படுத்தவும், காரணத்தை வெளிப்படுத்தவும், அவர் பூமியின் மேல் இருந்த போது, செய்ததுப் போன்று செய்வாரானால், நீங்கள் சந்தோஷத்தோடு உங்களுடைய சுகத்தை ஏற்றுக் கொள்ளுவீர்களாக. அப்படி செய்வீர்களென்றால் எங்கியிருந்தாலும் உங்களுடைய கரங்களை உயர்த்துங்கள். 112. அவன் என்ன ஜெப அட்டைகளை அவர்களுக்கு கொடுத்திருக்கிறான் என்று எனக்கு தெரியாது. நீங்கள் ஜெப அட்டைகளை வைத்துக் கொள்ள போவதில்லை. வெறுமனே. நீங்கள் ஜெபியுங்கள். நீங்கள் விசுவாசியுங்கள். அவர் அந்த வண்ணமாக செய்வாரனால், அவரை தாமே அடையாளம் காட்டுவாரானால், அப்பொழுது உங்களை அவரோடே அடையாளம் கண்டுகொள்ள நீங்கள் வெட்கப்பட கூடாது. நீங்கள் அதை செய்தாக வேண்டும். இப்பொழுது, இங்கே ஒரு நேரடியான சவால் இருக்கிறது. சபையில் இன்று காலையில், ஜெப அட்டைகளை கொடுத்து, அவர்களுக்காக ஜெபிக்கும் படியாக, அவர்களை பீடத்திற்கு அழைத்தோம். 113. பரிசுத்த ஆவியானவர் அவ்வளவு மகத்தான நேரமாய் அசைக்க, அவர்கள் என்னை அப்படியே பக்கவாட்டில் இழுக்கும் அளவுக்கு, நான் உணரும்படியாக ஆகி, அது போக வேண்டிய நேரமாக ஆனது. ஏனென்றால் நான் பெலவீனமாக இருந்தேன். இப்பொழுது இங்கே நான் கூறுகிறேன். ஜெப அட்டை இல்லாத உங்களை தான், அல்லது நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, அங்கே கூட்டத்தாரின் மத்தியில் உட்கார்ந்து கொண்டு நீங்கள் சவால் இடுகிறீர்கள். இதை செய்யும் படியாய், இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் கூறின கதை சத்தியமென்று நீங்கள் விசுவாசிக்கும் படியாய் நான் உங்களுக்கு சவால் இடுகிறேன். 114. நீங்கள் வியாதியாய் இருந்தால் நீங்கள் ஜெபியுங்கள். இன்று காலையில், இந்த ஜெப கூடாரத்தை சார்ந்திராத ஜனங்களா. என்று கண்டறிய நான் முயற்சிப்பேன். இன்றிரவு, நீங்கள் எங்கேயிருந்து வந்திருப்பீர்கள் என்று எனக்கு அக்கறை இல்லை. நீங்கள் ஜெபியுங்கள். பின்னர் அந்த மகத்தான பரிசுத்த ஆவியானவர் அவருடைய புகைப்படத்தை அங்கே வைத்திருக்கிறோம். அவர் நமது மத்தியில் வருவாரனால், அவர் இந்த காரியங்களை வாக்களித்து அவைகளை செய்வேன் என்று வாக்களித்திருக்கிறார் என்று நான் அதை அவ்வளவாய் பிரசங்கிக்க கேட்டிருக்கிறீர்கள். மட்டுமல்லாமல், அவர் இந்த பூமியின் மேல் இருந்தபோது, அவர் திரும்பவுமாக நம்முடைய மாம்சத்துக் குள்ளாக வந்த பொழுதும், அவர் அதே காரியங்களை செய்வார். இப்பொழுது நீங்கள் வியாதியாய் இருந்தால் சவால் விடுங்கள் 115. தேவனிடம் சவால் விட்டு, தேவனே. சகோ. பிரான்ஹாமுக்கு என்னை தெரியது. என்னை குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனால், நீர் அவரை என் பக்கமாக திருப்பி, நான் உம்முடைய வஸ்திரத்தை தொடும்படியாய் செய்யும், அதன் பிறகு நீர் பேசும் . அப்பொழுது இந்த சபையோடு உமக்கு தொடர்பு இருக்கிறதென்று நான் அறிந்து கொள்ளுவேன் என்று கூறுங்கள். சபை என்பது விசுவாசிகளாய் இருக்கிறது. நீர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர் என்று அப்பொழுது அறிந்து கொள்ளவே நீங்கள் ஜெபியுங்கள். நான் அதை செய்யும்படியாய் நடத்தப்படுகிறேன். நான் ஏன் அதை செய்தேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் அதை செய்யும் படியாய் நடத்தப்படுகிறேன். 116. இப்பொழுது, உங்களால் தலைகளை உயர்த்த கூடுமானால் சரியாக இங்கே, என்னை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கின்றது சில நிமிஷங்களுக்கு முன்னர் இந்த விதமாக தலையை உயர்த்தி ஜெபித்துக் கொண்டிருந்த சிறிய ஸ்தீரியாயிருக்கிறாள். அவளுக்காக மட்டுமல்லாமல், வேறு யாருக்காகவும் கூட அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நான் அறிந்த மட்டில் என்னுடைய ஜீவியத்தில் நான் அந்த ஸ்தீரியை கண்டதே இல்லை. அவள் எனக்கு முழுவதுமான அந்நியராய் இருக்கிறாள். ஒரு அறுவை சிகிச்சையைக் குறித்து அவளுடைய மகளுக்காக அவள் ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். நீ இந்த நாட்டிலிருந்து வரவில்லை. நீ டெக்ஸாசிலிருந்து வருகிறாய். அது கர்த்தர் உரைக்கிறதவதாக இருக்கிறது. உன்னிடத்தில் ஜெப அட்டைகள் இருக்கிறதா-? உன்னிடத்தில் இல்லையா-? உனக்கு ஒன்று தேவையில்லை. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. நீ அதைக்குறித்து ஜெபித்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்கு எப்படி தெரியும். உங்களால் காண முடியவில்லையா. பரலோகத்தின் தேவன். இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்துகிறார். தானியேல், இதை அவனுடைய நாட்களில் கூறவில்லையா-? இருதயத்தின் இரகசியங்களை தேவன் வெளிப்படுத்துகிறார். 117. அங்கே ஒரு ஸ்தீரி உங்கள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அதைக் குறித்து அவள் மிகவும் சந்தோஷமாய் இருக்கிறாள். அவளுக்கு இருதயக் கோளாறு இருக்கிறது. அதற்காக ஜெபிக்கும் படியாய் அவள் விரும்புகிறாள். எனவே, உங்களுடைய கரத்தை அவள் மேல் வையுங்கள். சரி, இப்பொழுது, நீ சிகாகோவிற்கு சென்று சுகமாயிரு. ஆமென் . அந்த ஸ்தீரியும் கூட எனக்கு தெரியாது. அவளைக் குறித்து எனக்கு தெரியாது. ஆனால் தேவன் உன்னை அறிந்திருக்கிறார். பாருங்கள். அவர் நம்மோடு தம்மை தாமே அடையாளங்காட்டும்படி செய்து கொண்டிருக்கிறார். உங்களால் விசுவாசிக்க கூடுமானால் எல்லா காரியங்களும் கைகூடும். இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கின்ற இந்த சிறிய யூத ஸ்தீரியானவள், அவளும் கூட ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். அது சரியே. நான் உன்னிடத்தில் ஏதாவது காரியம் சொல்ல வேண்டும் என்று ஜெபித்துக் கொண்டிருக்கிறாள். உன்னுடைய கோளாறு... நான் இன்று காலையில் கண்டேன். ஆனால், நான் அதை கூறவில்லை. ஆனால், நீ கவலைக் கொண்டிருக்கின்ற அந்த பாதங்கள் சரியாக ஆகப்போகின்றது. எனவே, நீ அதைக்குறித்து கவலைப்பட வேண்டாம். 118. இங்கே உட்கார்ந்துக் கொண்டிருக்கிற சிறிய அம்மாளே நீங்களும் விசுவாசிக்கிறீர்களா-? அவர்களுடைய தீர்க்கதரிசியென்று, அவர்களுடைய ஊழியக்காரரென்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உன்னை எனக்கு தெரியாது தேவன் உன்னை அறிவார். ஆனால், நம்மோடிருக்கிறவர் தேவனுடைய ஆவியாய் இருந்தால், அப்பொழுது, அவர் இயேசுவானவர் செய்ததுப் போலவே செய்வார் நீ ஜெபித்துக் கொண்டிருந்தாய் . அப்பொழுது நான் உனக்கு கவர்ச்சிக்கிறதுப் போல் காணப்பட்டேன் . அதோ, கர்த்தருடைய தூதனாவர் அங்கே அவள் பக்கத்தில் இருக்கிறார். உம்மால் விசுவாசிக்க கூடுமானால் உம்முடைய இருதயக் கோளாறும், மூட்டு வியாதியும் இல்லாமற்போய்விடும். உம்முடைய பெயர் திருமதி. விஸ்டம் என்பதாகும். அது சரியே. திருமதி. விஸ்டம். நீங்கள் வீட்டுக்கு திரும்பிப் போய் சுகமாய் இருங்கள். 119. என்னுடைய ஜிவியத்தில் நான் அந்த ஸ்தீரியை கண்டதே இல்லை. ஆனால் அவர் தேவனாய் இருக்கிறார். அதை விசுவாசிக்க கூடுமானால் இங்கே வாருங்கள் இங்கே உட்கார்ந்து கொண்டு, அவளுடைய கரத்தை இந்த விதமாக அவளுடைய வாய் மட்டுமாக உயர்த்தியிருக்கின்ற இந்த சிறிய ஸ்தீரியை பார்த்திருக்கிறீர்களா-? அந்த ஸ்தீரிக்கு மேலாக வெளிச்சமானது தொங்கி கொண்டிருக்கிறது. உங்களால் காண முடியவில்லையா : இப்பொழுது, பாருங்கள் - அப்படியே கீழே இறங்கி அவளிடமாய் வருகின்றது -அது உடைந்து கொண்டிருக்கிறதை நான் காண்கிறேன். அவளுக்கு ஈரலில் ஏதோ கோளாறு இருக்கிறது. ஈரல் கோளாறினால் அவதிப்படுகின்றாள். அது பித்த நீர். பை கோளாறு. சரி. நீர் திருமதி. ப்பால்மர். அது தான். இப்பொழுது யார் என்று ஞாபம் வருகிறது. நாம் வெறுமென தரிசனத்தை காணவில்லை - ப்பால்மரின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருப்பதை காண்கிறேன். அது உண்மை சகோதிரியே . இப்பொழுது நீ போய் சுகமாயிரு . உன் முழு இருதயத்தோடு விசுவாசி. அவளுக்கும் பின்னாலும் கூட ஒரு சிறிய ஸ்தீரி உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அவளும் நோக்கிப் பார்த்து, ஒரு விதமாய் பிரமித்துப் போயிருக்கிறாள். சரியாக அவளுக்கு பின்னாக.. 120. சகோதரியே உனக்கும் அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் உள்ள டேன்சல் தொல்லை நீங்கிவிடுமா என்று நினைக்கிறாயா-? உன் வீட்டுக்கு போகும் பாதையில் களிகூர்ந்து சந்தோஷி. உன்னுடைய இரண்டு கரங்களை அந்த இரண்டு டேன்கில் பிள்ளைகளின் மீது வை. உன்னுடைய தொல்லை போயிற்று. நீ சுகமாக்கப்பட்டாய். கர்த்தராகிய இயேசுவினால் நீங்கள் யாவரும் சுகமாக்கப்பட்டீர்கள். நீங்கள் சுகமாகி நன்றாய் இருங்கள். ஜீவிக்கின்ற தேவன் இன்றைக்கும் ஜீவிக்கிறார் என்பதை உங்களால் காண முடிகின்றதா-? எங்கேயும் அவர் அவ்வளவு மகத்துவமானவராய் இருக்கிறார். அவர் அப்படியாய் இல்லையா. அவரோடு நீங்கள் அடையாளம் கண்டுக் கொள்ள விரும்ப வில்லையா. நிச்சயமாக உங்களுக்கு விருப்பம். அடையாளம் கண்டு கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்கள். 121. இப்பொழுது நாம் ஒரு நிமிடம் நம்முடைய தலைகளை வணங்குவோமாக. அது என்னை அவ்வளவாய் பெலவீனப்படுத்துகிறது. தேவனே என் மேல் இரக்கமாயிரும். நான் கர்த்தரகிய இயேசுவை விசுவாசிக்க விரும்புகிறேன். என்னுடைய தொல்லைகளெல்லாம் இப்பொழுதே சரியாக்கப்பட வேண்டுமென்றே கூறிக் கொண்டு, ஜெபத்தில் என்னை நினைவுக் கூற வேண்டுமென்று எத்தனை பேர் விரும்புகின்றீர்கள். தேவன் உங்களோடு கூட இருப்பாராக. 122. இயேசுவை மரித்தோரிலிருந்து மீண்டுமாய் கொண்டு வந்த கர்த்தாவே, பரலோகத்தின் தேவனே, இது அவர்கள் விசுவாசிக்கும் வேளையாய் இருக்கும்படியாக, நான் அவர்கள் சார்பில் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். இதற்கு முன்பாக அவர்கள் செய்ததே இல்லையென்றால் அவர்கள் முன்பாக வந்து, இந்த தண்ணீர் தொட்டியில் இயேசு கிறிஸ்துவோடுகூட அடையாளம் கண்டு கொள்வார்களாக. ஏனென்றால் வேதமானது , ஞானஸ்நானத்தில் . அவரோடு கூட அடக்கம் பண்ணப்பட்டோமானால், அவருடைய மரணத்தில் பங்குக் கொள்வோம் என்றும், அவருடைய உயிர்தெழுதலிலும் கூட நாங்கள் பங்கு கொள்வோம் என்றும் கூறுகிறது. அது ஒரு வாக்குத்தத்தமாய் இருக்கிறது. 123. பண்டைய மகத்தான பரிசுத்த பேதுரு, நீங்கள் மனந்திரும்பி, பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவினால் ஞானஸ்நானம் பெறுங்கள். அப்பொழுது, பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள் என்று நமக்கு கூறுகிறார். இதோ என்னுடைய மருமகள் லாய்ஸ் பசியாயும், தாகமாயும், உபவாசித்துக் கொண்டும் காத்துக் கொண்டும் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். அங்கே பின்னாக என் சகோதரி பசியாயும், தாகமாயும் உபவாசித்துக் கொண்டும் காத்துக் கொண்டும் உட்கார்ந்து கொண்டிருக்கிறாள். ஒ-! கர்த்தாவே, எப்படியோ இப்பொழுதே பரிசுத்தாவியானவர் இந்த கூட்டத்துக்குள் அனுப்பி அவர்களுடைய ஆத்துமாக்களை உயிர்தெழுந்த வல்லமையோடு தாங்குவீராக. 124. அவர்கள் தாமே ஒரு உயிர்தெழுந்த வல்லமைக்குள்ளாக எழும்பி, காலூன்றி நின்று இயேசு கிறிஸ்துவோடு அவருடைய உயிர்தெழுதலில் அடையாளம் கண்டு கொள்வார்களாக. இதை. அளியும் கர்த்தாவே. ஒவ்வொரு பாவத்தையும் மன்னித்து தவறான ஒவ்வொன்றையும் விட்டு விட்டு, பிதாவே நாங்கள் ஜெபிக்கையிலே, உம்முடைய கிருபையை எங்களுக்கு தாரும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வியாதியாயும், பாதிக்கப்பட்டிருகின்ற யாவரையும் கர்த்தாவே சுகப்படுத்தும். நீர் இங்கே இருக்கின்றீர். நீர் தேவனாய் இருக்கீறீர். தேவனே, உம்மையே... நீர் நிருபியும். நீர் ஒரு சில காரியங்களை செய்து காட்டி, அவர்கள் மத்தியில் இருந்து மறைந்து வேறெங்கேயோ சென்று இன்னொரு பட்டனத்துக்கு சென்று, அங்கே வெளியே அப்படியே போகீறீர் என்று, உம்முடைய ஆவியின் குணாதிசயத்தை அறிந்தவர்களாய் ஜெபிக்கிறோம். 125. ஆனால் ஜீவிக்கின்ற தேவன் ஜீவித்தார் என்ற அடையாளத்தை நீர் பின் வைத்தீர். ஆனால் கர்த்தாவே, இப்பேர்ப்பட்ட அபிப்பிராயம் தான் ஜனங்கள் மத்தியில் இருக்கிறது பரிசுத்த ஆவியாவைர், சுகப்படுத்தவும், இரட்சிக்கவும், அவருடைய நன்மைகளால் நிறைக்கவும், இங்கே பிரசன்னராய் இருக்கிறார் என்பதை அவர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இந்த அபிப்பிராயம் தான் ஜனங்களின் இருதயத்தில் இருக்கிறதென்று கர்த்தராகிய இயேசுவே நான் ஜெபிக்கிறேன். நாங்கள் இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்-! 126. இப்பொழுது இங்கே எத்தனை பேர் ஞானஸ்நானம் பெறப்போகிறார்கள். உங்களுடைய காரியங்களெல்லாம் ஆயத்தமாய் இருக்கிறவர்கள் கரங்களை உயர்த்துங்கள். இன்னும் சில வினாடிகளில், அப்படியானால், நீங்கள் தண்ணீரண்டை செல்ல ஆயத்தமாகுங்கள். நாம் பரிசுத்த ஆவிக்காக ஒரு சில நொடிகள் காத்திருக்கையில் இதை செய்யுங்கள். இன்னும் பரிசுத்த ஆவியைப் பெறாமல், ஆனால் பெற்று கொள்ள வாஞ்சித்துக் கொண்டும் ஜெபித்துக் கொண்டும் இருக்கிறவர்கள் எத்தனைப் பேர்கள். கூடுமானால் "கேட்டி" (katay) நீ யாவது அல்லது வேறு யாராவது இப்பொழுது "பியானாவுக்கு" (Piano) செல்லுங்கள். நாம் சில ஞானப்பாட்டுகளை இப்பொழுது பாட போகிறோம். பாடிக்கொண்டிருக்கையில் ஞானஸ்நானம் பெற்று கொள்ள போகிற பெண்கள், அந்த அறைக்குள்ளாக போங்கள். ஞானஸ்நானத்திற்கு ஆயத்தமாய் உள்ள ஆண்கள் இந்த அறைக்குள்ளாக போங்கள் இந்த வைபவத்திற்காக நாமும் கூட ஆயத்தப்படுவோமாக. 127. பின்னர், பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்தில் வந்து, அவர் செய்ய விரும்புகின்ற காரியங்களை நமக்கு வெளிப்படுத்தும் படியாக நாம் அவரில் பேரில் காத்திருக்கப் போகிறோம். பின்னர் நாம் விளக்குகளை இந்த முக்கிய அரங்கத்தில் அணைத்து விடுவோம். ஊழியர்கள் அங்கு தண்ணீருக்குள் செல்வார்கள். பின்னர் நமக்கு இந்த ஞானஸ்நான வைபவம் உண்டாயிருக்கும். நாம் விளக்குகளை அணைப்பதற்கு முன்னர், ஒரு நிமிடம் சகோ. நிவான்ச் நாம் காத்து கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, ஒரு சில வேத வாக்கியங்களை நான் வாசிக்க விரும்புகிறேன். உங்களால் கூடுமானால்... அவர்கள் ஆயத்தமாக துவங்குகையில் நான் சில வேத வார்த்தைகளை வாசிக்க துவங்குகிறேன் . தேவன் வரம் பெற்றவர். என்று எத்தனை பேர் விசுவாசிக்கீறீர்கள் நிச்சமாக. . அவர் இப்பொழுது இங்கே இருக்கிறார். 128. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் பரிசுத்த ஆவியைப் பெற்று கொள்ளும் படியாய் எழும்பி நின்று அவரை ஏற்றுக் கொள்ளுங்கள் ஏன்-? அவர் இங்கே இருக்கிறார் என்று , அவருடைய வல்லமை நிருபித்து விட்டது - ஒரு அவிசுவாசத்தின் நிழல் நம் மேல் எப்படி இருக்கமுடியும். அவருடைய ஆசீர்வதிக்கப்பட்ட பிரசன்னமானது நம்முடைய ஆத்துமாவை குளிப்பாட்டுகின்றது. என்னுடைய உச்சிக் குரலில் அவருடைய நன்மைகளை கூச்சலிட வேண்டும் போன்று நான் உணருகிறேன். அவருடைய கிருபை என்றென்றைக்குமாய் உள்ளது . அவர் இங்கே இருக்கிறார். என்னுடைய இருதயம் எரிந்து கொண்டிருக்கிறது . அவருடைய சமூகத்தின் காரணத்தால் சந்தோஷித்தாலும், மிகுந்த களிப்பினாலும் நிறைக்கப்பட்டிருக்கிறது. 129. அவர்கள் விளக்குகளை அணைப்பதற்கு முன்னதாக நான், அப்போஸ்தலர். 1 அதிகாரத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். இங்கே இருக்கின்ற ஒவ்வொரு மனிதனும், போதகனும் அல்லது நபரும் சுவிசேஷகனும். அல்லது வேறு என்னவாக இருந்தாலும் சரி, இதுவாக அதுவாக இருந்தாலும் தேவன் எல்லையற்றவர் என்பார்கள், என்று நான் விசுவாசிக்கிறேன். ஒரு காரியத்தை ஒரு விதமாக செய்து அப்படியே திருப்பி இந்த காரியத்தை இந்த விதமாகவும் தேவனால் செய்ய முடியாது - எல்லா நேரத்திலும் அவர் செய்ய வேண்டாமா-? இதுவே தேவனிடத்திலிருந்து புறப்பட்டடு சென்ற பிரகடனம் ஆகும். 130. இஸ்ரவேலரே நான் சொல்லும் வார்த்தைகளை கேளுங்கள். நீங்கள் அறிந்திருக்கின்றபடி நசரேயனாகிய இயேசுவை கொண்டு, தேவன் உங்களுக்கு உள்ளே பலத்த செய்கைகளையும் அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார் அவர் தான் மேசியா என்று நிருபிக்கும்படியாக அவர் எந்த விதமான அடையாளத்தை செய்தார். அவர்களுடைய இருதயத்தின் எந்த விதமான சிந்தனைகளை அறிவதன் மூலமாக. அது சரிதானே. செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் செய்து தேவன் அவரோடுகூட இருக்கிறார் என்பதை நிருபித்தார் என்று பேதுரு எவைகளை கூறினான் அப்படியிருந்தும் தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின் படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்தஇயேசுவை நீங்கள் பிடித்து அக்கிரமக்காரருடைய கைகளினால் சிலுவையில் ஆணியடித்து கொலை செய்தீர்கள். 131. தேவன் அவருடைய மரண உபாதைகனின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார். அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்க கூடாததிருந்தது. அவரைக் குறித்து தாவீது, கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி, நோக்கி கொண்டிருக்கிறேன். நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுப் பாரிசத்தில் இருக்கிறார். அதினாலே, என் இருதயம் மகிழ்ந்தது. என் நாவு களிகூர்ந்தது . என் மாம்சமூம் நம்பிக்கையோடு தங்கி இருக்கும். என் ஆழிவைக் காண வொட்டீர். ஜீவ மார்க்கங்களை எனக்கு தெரியப் படுத்தினீர். உம்முடைய சந்நிதானத்திலே என்னை சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். 132. சகோதரனே, கோத்திர தலைவனாகிய தாவீதைக் குறித்து நான் உங்களுடனே தைரியமாய் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். அவன் மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான். அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்தில் இருக்கிறது. அவர் தீர்க்கதரிசியாய் இருந்து உன் சிங்காசனத்தில் விற்றிருக்க, மாம்சத்தின் படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்ப பண்ணுவேன் என்று தேவன், தனக்கு சத்தியம் பண்ணினதை அறிந்தப்படியால், அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்தில் விடப்படுவதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக் குறித்து இப்படி சொன்னான். இந்த இயேசுவை, தேவன் எழுப்பினால். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாய் இருக்கிறோம். ஒ... அது எனக்கு மயக்கிழுக்க செய்கிறது நாம் இன்னும் அவர் சாட்சிகளாய் இருக்கிறோம் - அவர் மரித்தோரிலிருந்து எழுப்பப் பட்டார். இன்றிரவு அவர் ஜீவிக்கிறார். அவர் தேவனுடைய வலது கரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தின்படி, பரிசுத்த ஆவியைப் பெற்று நீங்கள் காண்கிறதும், கேட்கிறதுமாகிய இதை பொழிந்தருளினார். 133. தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாகி போடும் வரைக்கும், நீர் என் வலது பாரிசத்தில் உட்காரும் என்று, கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லி இருக்கிறான். ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த அந்த இயேசுவையே தேவன், ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினார் என்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவீர்கள் என்றார். 134. இப்பொழுது, உலகத்தின் எல்லா பாஷைகளிலும் பேசக் கேட்கும் படியாய், அவன் எந்த பாஷையில் பேசினான். இதை அவர்கள் கேட்ட பொழுது, ஜனங்கள் இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி பேதுருவையும், மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். சற்று முன்னர் தான் அவர்களெல்லாரும், அவர்களுக்குப் பைத்தியமாய் காணப்பட்டார்கள். இப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த எல்லா தேசத்தவர்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்த மகத்தான பிரசங்கத்திற்குப் பின்னர், சகோதரரே நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்றார்கள். அதன் பின்னர் பேதுருவின் மருந்து சீட்டு வந்தது - பேதுரு அவர்களை நோக்கி, நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்பெறுவீர்கள். 135. வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைக்ளுக்கும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி, இன்னும் அநேக வார்த்தைகளாலும், சாட்சி கூறி, மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி, உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் என்றும் புத்தி சொன்னான். 136. இன்றைக்கு நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கும் சுவிசேஷம் அதே அல்லவா. வந்து கொண்டிருக்கின்றதான தலைமுறையிலிருந்து உங்களை இரட்சித்து கொள்ளுங்கள். அநேக அடையாளங்களும், அற்புதங்களும் செய்யப்படுகின்றன. இயேசு கிறிஸ்துவின் ரசன்னம் அவரை தாமே ஜீவனுள்ளவராய் காட்டிக் கொண்டிருக்கின்றது. அங்கே கட்டளையாக கொடுக்கப்பட்ட அதே ஞானஸ்நானம் தான் இன்றிரவு இந்த பிரசங்கப் பீடத்திலும் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறது - அவனுடைய வார்த்தையை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றைய தினம் ஏறக்குறைய 3000 பேர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 137. அன்புள்ள தேவனே, உம்மோடுக் கூட ஞானஸ்நானத்தில் அடையாளம் கண்டுக் கொள்ளயிருக்கிறவர்களாய் அந்த அறை நிறைய நின்றுக் கொண்டிருக்கிறார்கள். கர்த்தாவே, நீர் இந்த வேளையில் தயவாய், அவர்கள் தண்ணீரண்டை வருகையில் அவர்களுடைய ஆத்துமா பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருக்கும்படியாக அவர்களுக்கு ஏதாவது காரியம் சம்பவிக்கும்படியாக செய்யும்படி கர்த்தாவே அவர்கள் சார்பில் நான் உம்மிடத்தில் ஜெபிக்கிறேன். அவர்கள் தாமே வந்து தண்ணீரை விட்டு போய், சுவிசேஷத்தை பிரசங்கிப்பதிலும், ஞாயிறுப் பள்ளியில் போதிப்பதிலும், அந்நிய பாஷைகளில் பேசுவதிலும், பாஷைகளை வியாக்கியானிப்பதிலும், அடையாளங்களை யும், அற்புதங்களையும், அதிசயங்களையும் செய்வதிலும், அவைகள் எல்லாவற்றிக்கும் மேலாக அவர்களுடைய ஆத்துமாக்களில், சாந்தத்தோடும், தயவோடும், பொறுமை யோடும், தாழ்மையோடும் தேவனுடைய அன்பு எரிந்து கொண்டிருப்பதிலும், அவர்கள் உம்மை வெளிப்பட செய்வார்களாக.. 138. கர்த்தாவே நான் அவர்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். அவர்கள் இந்த எழுப்புதலில் வெற்றி சின்னங்களாக இருக்கிறார்கள். அவர்களை உம்முடைய பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டுமென்று நான் ஜெபிக்கிறேன். என்றாவது ஒரு நாளில் நான் உம்முடைய வேதத்திலிருந்து பிரசங்கித்த பின்னர் இங்கே அதை சார்ந்தவனாய் நின்று கொண்டிருக்கையிலே, என்னுடைய முழு இருதயத்தோடும் நீர் எனக்கு வெளிப்படுத்தினப்படி சத்தியம் என்று நான் நினைக்கிறதை நான் அறிவிக்கிறேன். 139. கர்த்தாவே, இங்கே குழுமியிருக்கின்ற நாங்கள் உயிர்த்தெழுதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றபடியால். அவர்களுடைய ஞானஸ்நானத்தின் மேல் நாங்கள் இங்கு கர்த்துக் கொண்டிருக்கிறோம். என்றோ ஒரு நாள் கர்த்தாவே, உன்னதங்களிலே நாங்கள் எல்லோருமாக ஒன்று கூடி நின்று கொண்டிருக்கையில் வானத்திலிருந்து ஒரு முழக்கம் போல் உண்டாவதாக. எக்காளம் தொனிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள்ளாக மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்களாக, அவரோடுகூட நங்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு, இவ்விதமாய் கர்த்தரை நடுவானில் சந்தித்து, என்றென்னறக்குமாய் அவரோடு கூட இருப்போமாக. இதை அளியும் பிதாவே. எங்களை ஆரோக்கியத்தோடும், சந்தோஷம், வைராக்கிய நிறைவோடும் வைத்துக் கொள்ளும். நாங்கள் பணத்தை கேட்க வில்லை. சுலபமான காரியங்களை நங்கள் கேட்கவில்லை, நாங்கள் இயேசுவைப் போல இருக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம். 140. சாந்தமாயும், தயவாயும் எப்பொழுதும் பிதாவின் வேலைகளில் அலுவலாய் இருக்கின்ற அவர் மேல் இருக்கின்ற அந்த விதமான ஆவியோடு நாங்கள் அவரோடு கூட அடையாளம் கண்டு கொள்ளப்பட விரும்புகிறோம். கர்த்தாவே, இந்த எழுப்புதலை முடிக்கும் வேளையிலே அநேக விலையேறப் பெற்ற ஆத்துமாக்களின் அடையாளம் கண்டு கொள்ளப்படுகின்ற இந்த வேளையில் பரிசுத்த ஆவியை அவர்களுக்கு கொடுப்பதன் மூலமாக உம்மையே நீர் தொடர்ந்து அடையாளம் கண்டு கொள்ளும். இதை அளியும் பிதாவே. 141. இந்த சிறிய ஜெப கூடாரத்தையும், ஒவ்வொரு போதகனையும் அதில் பங்கெடுத்த ஒவ்வொருவரையும் இங்கே வந்த ஒவ்வொரு சபையையும் ஆசீர்வதியும். கர்த்தாவே, உலகம் முழுவதுமாக நீர் ஒவ்வொரு சபையிலும், நீர் எழுப்புதலை அனுப்பும்படியாய் நான் ஜெபிக்கிறேன். இயேசு கிறிஸ்துவினுடைய எடுத்துக் கொள்ளப்படுதலுக்குரிய கிருபையை எங்கள் மத்தியில் கொடுக்கும்படியாக அவர்கள் ஒரு மனதோடும் ஏக சிந்தையோடும், இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 142. இப்பொழுது சிறிதுநேரத்திற்கு முக்கிய அரங்கத்தின் விளக்குகள் அணைக்கப்படும். இந்த கைக்குட்டைகளூக்காக ஜெபிக்கப்பட்டாயிற்று. இப்பொழுது சிறிது நேரத்திற்கு விளக்குகள் அணைக்கப்படும். அப்பொழுது அமைதியாய் இருங்கள். போதகர் ஞானஸ் நானம் கொடுத்துக் கொண்டிருப்பார். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் எல்லாருக்கும் நாங்கள் கொடுத்து முடிக்கும் வரைக்கும். இப்பொழுது எல்லாராலும் அதை காண முடிகின்றதா. இப்பொழுது அந்த ஒரு ஒலிப் பெருக்கி, அதை அப்படியே கீழாக தண்ணீர் தொட்டிக்கு கீழ்மட்டுமாய் இழுங்கள் ஆம், அது சரி, மேலாக தான் தோன்றுகிறது 143. இது ஒலிப்பதிவாகுதலுக்கு போகின்றதா. சரி. நீங்கள் எடுத்ததுலை செய்யுங்கள். இன்று இதை நானே செய்ய வேண்டுமென்றிடுக்கிறேன். எனக்கு அவ்வளவு உஷ்ணமாய் இருக்கிறது சகோ. நெவில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார் எனவே, போதரும் ஒரு மிக அருமையான சகோதரன். அவரும் கூட இதில் ஏதாவது செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். ஒரு நொடி இருங்கள். அரங்கத்தின் விளக்குகள் எல்லாம் அணைந்து விடும். அப்பொழுது உங்களால் காண முடியும். அதற்கு பின்னால் தொங்கிக் கொண்டிருக்கின்ற ஒரு மகத்தான கண்ணாடியில் காணலாம். அங்கே நேராக, தண்ணீருக்குள்ளாக அவர் அதை ஆயத்தம் செய்வதற்குள், அதை அங்கே வைக்கும் படி அவர்கள் வருவார்கள். 144. ஒவ்வொரு முறை ஞானஸ்நானம் கொடுக்கும் போது, மூப்பர்கள் அந்த திரையை இழுத்து விடுவார்கள். அவர்கள் தண்ணீர்களிலிருந்து வெளியே வருகையில் அது அவர்களை பெண்களிடமிருந்து தவிர்த்து விடும். எனவே, அதன் பிறகு, அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வந்துக் கொண்டிருப்பார்கள். உங்களுடைய பெயர்களை நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் யார் என்பதை கூறி அவர்களை இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பார்கள். 145. இப்பொழுது நினைவிருக்கட்டும், என்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட இந்த சுவிசேஷத்திற்கு உத்திரவாதமாய் உள்ள ஒரு போதகன் என்ற முறையில் நான் அதை யாருக்கு வேண்டுமானாலும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம். யாருக்கும் அதை மறு ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும் படியாய் சிபாரிசு செய்வேன். அதை தான் பவுல் கூறியிருக்கிறான். அவர்கள் ஒரு வழியாய் நாமம் இல்லாமல் ஞானஸ்நானம் பெற்றிருந்தும் கூட அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் மீண்டுமாய் ஞானஸ்நானம் பெறும்படியாய் அவன் கூறினான். அவன் சொன்னான் .. ஒரு தூதன் வந்து வேறு எதாவது காரியத்தை போதித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்ககடவன் என்று. அதை கலாத்தியர் முதலாம் அதிகாரத்தில் 8-ம் வசனத்தில் இருக்கிறது. 146. வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறு ஒரு சுவிசேஷத்தை உங்களுக்கு பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாய் இருக்க கடவன். இப்பொழுது ஞானஸ்நானம் துவங்குவதற்கு முன்னதாக, எல்லாரும் பார்க்க முடிகின்றதா. ஆமென்-!-!. *******